6 அரசு அதிகாரிகளின் வீடு, அலுவலகங்கள் உள்பட 24 இடங்களில் ஊழல் தடுப்பு படை சோதனை
கர்நாடகத்தில் நேற்று ஒரே நாளில் 6 அரசு அதிகாரிகளின் வீடு, அலுவலகங்கள் உள்பட 24 இடங்களில் ஊழல் தடுப்பு படை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.
பெங்களூரு,
கர்நாடகத்தில் நேற்று ஒரே நாளில் 6 அரசு அதிகாரிகளின் வீடு, அலுவலகங்கள் உள்பட 24 இடங்களில் ஊழல் தடுப்பு படை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். சோதனையின்போது அரசு அதிகாரிகளின் சொத்து பத்திரங்கள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை ஊழல் தடுப்பு படையினர் ஆய்வு செய்தனர்.
அரசு அதிகாரிகள்
தாவணகெரே மாநகராட்சியின் கூடுதல் கமிஷனராகவும், தாவணகெரே மாவட்டம் ஹரிஹரா நகர அபிவிருத்தி அதிகாரியாகவும் இருப்பவர் கோபாலகிருஷ்ணா. துமகூரு துணை மண்டல பிரிவில் உதவி கமிஷனராக பணியாற்றி வருபவர் திப்பேசாமி. பீதர் மாவட்டம் காராஞ்சா நீர்ப்பாசன திட்டத்தின் உதவி செயற்பொறியாளராக செயல்பட்டு வருபவர் விஜயகுமார்.
இதேபோல், பெலகாவி மாநகராட்சி நிர்வாகம் மற்றும் பெலகாவி ‘ஸ்மார்ட் சிட்டி‘ திட்டத்தின் உதவி செயற்பொறியாளராக இருப்பவர் கிரண் சுப்பாராவ். கர்நாடக அரசின் வடகிழக்கு சாலை போக்குவரத்து கழகத்தின்(கலபுரகி) பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு அதிகாரியாக செயல்பட்டு வரும் ஸ்ரீபதி தொட்டலிங்கண்ணனவர், சிக்கமகளூரு மாவட்டம் கலசா வருவாய் அதிகாரியும், கலசா (பொறுப்பு) தாசில்தாருமாக இருப்பவர் கீர்த்தி ஜெயின்.
ஊழல் தடுப்பு படை சோதனை
இந்த 6 அதிகாரிகளும் தங்களின் வருமானத்துக்கு அதிகமாக சொத்துகள் சேர்த்திருப்பதாக ஊழல் தடுப்பு படைக்கு புகார்கள் சென்றன. இந்த புகார்களின் அடிப்படையில் ஊழல் தடுப்பு படையினர் விசாரணையை தொடங்கினர். இந்த நிலையில், நேற்று காலையிலேயே அதிகாரிகளின் 6 பேரின் வீடு, அலுவலகங்களில் ஊழல் தடுப்பு படை அதிகாரிகள் சென்று அதிரடி சோதனை நடத்தினார்கள்.
பெங்களூரு, தாவணகெரே, துமகூரு, சித்ரதுர்கா, பீதர், கலபுரகி, பெலகாவி, உத்தர கன்னடா, தார்வார் மற்றும் தட்சிண கன்னடா ஆகிய மாவட்டங்களில் உள்ள அதிகாரிகளின் வீடு, அலுவலகங்கள் என மொத்தம் 24 இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த சோதனைகளின்போது அதிகாரிகளின் வீடுகளில் உள்ள தங்க நகைகள், வெள்ளி பொருட்களின் மதிப்பும் கணக்கிடப்பட்டன. வீட்டில் உள்ள சொத்து பத்திரங்கள், வங்கி கணக்கு புத்தகங்கள் மற்றும் அலுவலகங்களில் உள்ள முக்கிய ஆவணங்களை கைப்பற்றி அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இந்த அதிரடி சோதனை நேற்று இரவு வரை தொடர்ந்து நீடித்தது.

Related Tags :
Next Story