காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி த.மா.கா. இளைஞர் அணி ஆர்ப்பாட்டம்
திண்டுக்கல்லில் த.மா.கா. இளைஞர் அணி சார்பில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
திண்டுக்கல்,
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, த.மா.கா. இளைஞர் அணி சார்பில், திண்டுக்கல் நாகல்நகரில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட தலைவர்கள் சுந்தரமூர்த்தி, சின்னசாமி ஆகியோர் தலைமை தாங்கினர். த.மா.கா. மாவட்ட தலைவர் ராமதாஸ், மாநில செயலாளர் மச்சக்காளை, மாநில நிர்வாகி கார்த்திக், நகர தலைவர் சந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
அப்போது காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், பெட்ரோல் மற்றும் டீசல் விலையை சரக்கு-சேவை வரிக்குள் கொண்டு வர வேண்டும். விவசாய கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும். பஸ் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும். நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

Related Tags :
Next Story