மர்மமான மரண தேவதை
மெக்சிகோவிலும், மத்திய அமெரிக்காவிலும், ‘சான்டா முயர்ட்’ மரணத்தின் தேவதையாகக் கொண்டாடப்படுகிறார்.
சான்டாவை ஒரு கோடிக்கும் அதிகமானவர்கள் வணங்கி வருகிறார்கள். அஸ்டெக் மக்களால் கொண்டாடப்பட்ட இந்த மரண தேவதைக்கு, ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு மாதம் திருவிழா நடத்துகிறார்கள்.
தோற்றம் எலும்புக் கூடுபோல் இருந்தாலும், அதில் கிறிஸ்துவ மதத்தில் வணங்கப்படும் புனிதர்களின் தோற்றங்களை உள் நுழைத்திருக்கிறார்கள். இவரது கையில் விவசாய அரிவாளும், உலக உருண்டையும் இருக்கின்றன. கடவுளால் மனிதர்களிடம் சமநிலையை உருவாக்க இயலாது. ஆனால் மரண தேவதையால் எல்லா மனிதர்களையும் சமமாகப் பார்க்க முடியும் என்கிறார்கள், பக்தர்கள்.
‘‘மரணத்தில் மட்டும்தான் ஏழை, பணக்காரன், வலிமையானவன், வலிமையற்றவன் என்ற பாகுபாடு கிடையாது. இவரை வணங்கும்போது மரணம் குறித்த பயம் வருவதில்லை’’ என்கிறார் மதங்களை ஆராயும் ரெஸா அஸ்லான்.
திருநங்கைகள், ஓரினச் சேர்க்கையாளர்கள் போன்று, சமூகத்தால் புறக்கணிக்கப்படுபவர்கள் பலரும் மரண தேவதையை விரும்புகிறார்கள். ‘‘சான்டாவைப் பின்பற்றுவோர் அதிகரித்து வருவதால் பலரும் பதற்றமடைகிறார்கள். அதனால் அந்தக் கடவுளை தவறாகச் சித்தரிக்கிறார்கள். நான் நீண்ட காலமாக இவரை வணங்கி வருகிறேன். இவர் கடவுளின் கட்டளைகளை ஏற்று மனிதர்களுக்கு உதவக்கூடிய தேவதை’’ என்கிறார் டேனியல் சான்டனா.
Related Tags :
Next Story