தூத்துக்குடி துறைமுகத்தில் ஊழியர்கள் குடும்பத்தினருடன் தர்ணா போராட்டம் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்தது


தூத்துக்குடி துறைமுகத்தில் ஊழியர்கள் குடும்பத்தினருடன் தர்ணா போராட்டம் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்தது
x
தினத்தந்தி 22 March 2018 2:30 AM IST (Updated: 21 March 2018 4:48 PM IST)
t-max-icont-min-icon

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனநாயக ஊழியர் சங்கத்தினர் குடும்பத்தினருடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி துறைமுகத்தில், பெரிய துறைமுகங்களை தனியார் மயமாக்கும் முயற்சியை கண்டித்தல் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனநாயக ஊழியர் சங்கத்தினர் குடும்பத்தினருடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தர்ணா போராட்டம்

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் நிர்வாக அலுவலகம் முன்பு நேற்று காலை 10 மணிக்கு துறைமுக ஜனநாயக ஊழியர் சங்கத்தினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்துக்கு வ.உ.சி. துறைமுக ஜனநாயக ஊழியர் சங்க தலைவர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். செயலாளர் ரசல், பொருளாளர் மீனாட்சி சுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். போராட்டத்தை சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.

கோரிக்கைகள்

 நாட்டின் 12 பெரிய துறைமுகங்களை தனியார் மயமாக்கும் மேஜர் போர்ட் அத்தாரிட்டி சட்டம் 2016 பாராளுமன்ற கூட்ட தொடரில் நிறைவேற்றப்பட உள்ளதை கண்டித்தும், துறைமுக ஊழியர்களுக்கு 2017 ஜனவரி 1 முதல் நிலுவையில் உள்ள ஊதிய ஒப்பந்தத்தை நிறைவேற்றுதல், துறைமுகத்தில் காலியாக உள்ள இடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்ப வேண்டும், ஊழியர், பென்சனர் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் அம்சங்களை சேர்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது.

இந்த போராட்டத்தில் ஐ.என்.டி.யு.சி. மாநில செயல் தலைவர் கதிர்வேல், துறைமுக ஜனநாயக ஊழியர் சங்க நிர்வாகிகள், ஈசுவரமூர்த்தி, ஞானதுரை, ராம்ராஜ், அரிகுமார், ராஜ்குமார், ஆனந்த் முருகன் மற்றும் துறைமுக ஊழியர்கள், அதிகாரிகள், குடும்ப உறுப்பினர்கள், ஒப்பந்த தொழிலாளர்கள், பென்சனர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story