கணவரை அரிவாளால் வெட்டி பெண்ணிடம் சங்கிலி பறிப்பு: தேனியை சேர்ந்தவருக்கு 7 ஆண்டு ஜெயில் தண்டனை தென்காசி கோர்ட்டு தீர்ப்பு
தேனியை சேர்ந்தவருக்கு 7 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து தென்காசி கோர்ட்டில் தீர்ப்பு அளிக்கப்பட்டது.
தென்காசி,
வீடு புகுந்து கணவரை அரிவாளால் வெட்டி பெண்ணிடம் தங்க சங்கிலி பறித்த வழக்கில் தேனியை சேர்ந்தவருக்கு 7 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து தென்காசி கோர்ட்டில் தீர்ப்பு அளிக்கப்பட்டது.
வீடு புகுந்து சங்கிலி பறிப்பு
நெல்லை மாவட்டம் செங்கோட்டை மேல அரசாழ்வார் தெருவை சேர்ந்தவர் அரிகரன். இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 14.10.2003 அன்று இவர் தனது மனைவியுடன் இரவில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது நள்ளிரவு 1.30 மணிக்கு வீட்டின் கதவை தட்டும் சத்தம் கேட்டது.
அரிகரன் கதவை திறந்த போது 3 பேர் வீட்டிற்குள் புகுந்து அரிகரனின் மனைவி சாவித்திரி கழுத்தில் கிடந்த தங்க சங்கிலியை பறிக்க முயன்றனர். அரிகரன் இதை தடுக்க முயன்ற போது அவரை அரிவாளால் வெட்டி விட்டு சாவித்திரியின் கழுத்தில் கிடந்த 8 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்றனர்.
ஜெயில் தண்டனை
இந்த சம்பவம் குறித்து செங்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து தேனீ அரண்மணை புதூரை சேர்ந்த கருப்பன் மகன் அய்யப்பன் (வயது 48), அதே பகுதியை சேர்ந்த முருகன், ரெங்க நாதன் ஆகிய 3 பேரை கைது செய்தனர். இந்த வழக்கு தென்காசி கூடுதல் உதவி அமர்வு நீதி மன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில் முருகன், ரெங்க நாதன் ஆகிய 2 பேர் மீது குற்றம் நிரூபணமாகவில்லை.
எனவே அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். அய்யப்பன் மீதான குற்றம் நிரூபணமானது. நீதிபதி திருவேங்கட சீனிவாசன் இந்த வழக்கை விசாரித்து, அய்யப்பனுக்கு 7 ஆண்டு ஜெயில் தண்டனையும் ரூ.1500 அபராதமும், கட்ட தவறினால் மேலும் ஒரு மாதம் ஜெயில் தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் ராமச்சந்திரன் ஆஜரானார்.

Related Tags :
Next Story