நெல்லை அருகே, இளம்பெண் தூக்குப்போட்டு சாவு: தற்கொலைக்கு தூண்டியதாக கணவன் கைது விதவைப்பெண் கோர்ட்டில் சரண்


நெல்லை அருகே, இளம்பெண் தூக்குப்போட்டு சாவு: தற்கொலைக்கு தூண்டியதாக கணவன் கைது விதவைப்பெண் கோர்ட்டில் சரண்
x
தினத்தந்தி 22 March 2018 2:00 AM IST (Updated: 21 March 2018 9:29 PM IST)
t-max-icont-min-icon

நெல்லை அருகே இளம்பெண் தூக்குப்போட்டு இறந்த வழக்கில், தற்கொலைக்கு தூண்டியதாக அவரது கணவனை போலீசார் கைது செய்தனர்.

பேட்டை,

நெல்லை அருகே இளம்பெண் தூக்குப்போட்டு இறந்த வழக்கில், தற்கொலைக்கு தூண்டியதாக அவரது கணவனை போலீசார் கைது செய்தனர். மேலும் கள்ளக்காதலியான விதவைப்பெண், சேரன்மாதேவி கோர்ட்டில் சரண் அடைந்தார்.

டிரைவர்


நெல்லை பழையபேட்டை கிருஷ்ணபேரி நயினார் காலனியை சேர்ந்தவர் சதீஷ் (வயது 36), லோடு ஆட்டோ டிரைவர். இவருடைய மனைவி ரேவதி (34). இவர்களுக்கு திருமணம் முடிந்து 13 ஆண்டுகள் ஆகிறது. 3 பெண் குழந்தைகள் உள்ளனர்.

சதீசுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த விதவைப்பெண் ஒருவருக்கும் ரகசிய உறவு இருந்துள்ளது. இதுதொடர்பாக கணவன்– மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

கைது

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலையிலும் கணவன்–மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ரேவதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுதொடர்பாக பேட்டை போலீசார் விசாரணை நடத்தி, மனைவியை தற்கொலைக்கு தூண்டியதாக சதீஷ் மீது வழக்குப்பதிவு செய்து அவரை நேற்று கைது செய்தனர். மேலும் சதீசின் கள்ளக்காதலியான விதவைப்பெண், சேரன்மாதேவி கோர்ட்டில் சரண் அடைந்தார்.

Next Story