அரசியல் கட்சிகள் போராட்டத்தால் ரதத்திற்கு நல்ல விளம்பரம் கிடைத்துள்ளது, விசுவ இந்து பரிஷத் தலைவர் பேட்டி
அரசியல் கட்சிகள் போராட்டத்தால் ரதத்திற்கு நல்ல விளம்பரம் கிடைத்துள்ளது என்று ராமேசுவரத்தில் விசுவ இந்து பரிஷத் நிறுவன தலைவர் வேதாந்தம் குற்றம்சாட்டினார்.
ராமேசுவரம்,
விசுவ இந்து பரிஷத் முன்னாள் அகில உலக செயல் தலைவரும், தமிழ்நாடு நிறுவன தலைவருமான வேதாந்தம் ராமேசுவரம் கோசுவாமி மடத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:- உத்தரபிரதேசம் அயோத்தியில் இருந்து ராமர் கோவில் கட்ட வலியுறுத்தி ராமராஜ்ய ரதம் உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா, கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் யாத்திரை மேற்கொண்டுள்ளது. இந்த ரத யாத்திரைக்கும், விசுவ இந்து பரிஷத் அமைப்புக்கும் துளி கூட தொடர்பு கிடையாது. எதையுமே தெரிந்து கொள்ளாமல் தமிழகத்தில் உள்ள சில அரசியல்வாதிகள் பேசி வருகின்றனர்.
கேரளா மாநிலம் திருவனந்தபுரம் ராமதாசமிஷன் என்ற நிறுவனத்தின் சார்பில் இயக்கப்படும் இந்த ராமராஜ்ய ரதத்துக்கு இதுவரை கேரளா, கர்நாடகா உள்பட 4 மாநிலங்களில் இல்லாத எதிர்ப்பு தமிழகத்தில் மட்டும் ஏற்பட்டுள்ளது. 23 சதவீதம் முஸ்லிம்கள் வசிக்கக்கூடிய கேரளாவில் கூட இதனை எதிர்க்கவில்லை. ஆனால் தமிழகத்தில் செங்கோட்டை பகுதியில் நுழைந்தவுடன் தமிழக எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் உள்பட சில அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி உள்ளனர். அரசியல் கட்சிகள் செய்யும் இந்த போராட்டத்தினால் இந்த ரதத்திற்கு நல்ல விளம்பரம் கிடைத்துள்ளது. இதற்கு விசுவ இந்து பரிஷத் சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். தற்போது மக்கள் ஆங்காங்கே கூட்டம் கூட்டமாக நின்று ரதத்தை பார்வையிடுகின்றனர்.
இந்தியாவில் மோடி ஆட்சிக்கு முன்பாக பா.ஜ.க. 5 மாநிலங்களில் மட்டுமே ஆட்சி செய்தது. தற்போது 23 மாநிலங்களில் பா.ஜ.க. ஆட்சி நடக்கிறது. பா.ஜ.க.வின் இந்த வளர்ச்சியை தாங்க முடியாமல் எதிர்க்கட்சிகள் தூக்கமில்லாமல் தவிக்கின்றன. மாநில அரசு மத்திய அரசுடன் இணைந்து செயல்பட்டால் தான் அனைத்து திட்டத்திற்கும் நிதிகளை பெற்று சிறப்பான ஆட்சி நடத்த முடியும். அதுபோல தமிழகத்தில் நடப்பது தவறு ஒன்றுமில்லை. தமிழகத்தில் வன்முறையை உருவாக்கி போராட்டங்கள் செய்து ஆட்சியை கலைக்க திட்டமிட்டு தி.மு.க. செயல்படுகிறது என்றுதான் நினைக்கிறேன். ஈ.வே.ரா. பெரியார் கத்தி வைத்துக்கொள்ள கூறியது வன்முறையா? இல்லையா? பூணூலை அறுப்பது, குடுமியை அறுப்பது வன்முறை இல்லையா? இந்தியாவில் இந்துக்கள் தான் படுகொலை செய்யப்படுகிறார்களே தவிர வேற்றுமதத்தினர் கொலை செய்யப்படுவதில்லை.
ராமர் கோவில் கட்டச்சொல்வது எந்த விதத்தில் வன்முறையாகும். இது போன்ற போராட்டங்களில் ஈடுபடுவது வேடிக்கையாக உள்ளது. 144 தடை உத்தரவு பிறப்பிக்க வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது. பாதுகாப்பு கொடுக்க வேண்டிய அரசு தடை விதிக்க வேண்டிய அவசியம் இல்லை. 1983-ம் ஆண்டு முதல் இந்த ரத யாத்திரை என்பது தொடர்ச்சியாக நடந்து வருகிறது. இது யாரையும் புண்படுத்தவதற்காக நடைபெறும் யாத்திரை அல்ல. தங்களது கோரிக்கையை வலியுறுத்தி செல்லும் யாத்திரை தான். வருகிற ஜூன் மாதம் 10-ந்தேதி முதல் 25-ந்தேதி வரை பூசாரிகளுக்கு பயிற்சி முகாம் நடைபெற உள்ளது. இதேபோல ஏழை பெண்கள் 20 பேருக்கு இலவச திருமணம் நடத்தி வைக்க உள்ளோம்.கோவில் நிர்வாகத்தை அறநிலையத்துறையில் இருந்து இந்துக்களிடமே ஒப்படைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். அப்போது கோசுவாமி மடம் நிர்வாகி ராமசுப்பு உடனிருந்தார்.

Related Tags :
Next Story