இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்
நீலகிரி மாவட்டத்தில் இந்து முன்னணியினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கூடலூர்,
தமிழகத்தில் நடைபெறும் மதமாற்றத்தை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கைது செய்த இந்து முன்னணி நிர்வாகிகளை விடுதலை செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் இந்து முன்னணியினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஊட்டி ஏ.டி.சி. திடலில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு ஊட்டி நகர தலைவர் சுப்பிரமணி தலைமை தாங்கினார். நகர பொருளாளர் வேலுச்சாமி, மாவட்ட தலைவர் மஞ்சுநாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பல்வேறு கோஷங்களை எழுப்பினார்கள்.
மஞ்சூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு இந்து முன்னணி மாவட்ட செயலாளர் எமரால்டு மணிகண்டன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் குந்தா ஒன்றிய செயலாளர் ரகு உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கோத்தகிரி மார்க்கெட் திடலில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு இந்து முன்னணி மாவட்ட செயலாளர் ரத்னம் தலைமை தாங்கினார். மாவட்ட பொறுப்பாளர் ஜெகன், நகர தலைவர் நளி, ஒன்றிய செயலாளர் ராஜு, பொது செயலாளர் ராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் இந்து முன்னணி நிர்வாகிகள் மீது போலீசார் பொய் வழக்கு போடுவதை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. முடிவில் மணிகண்டன் நன்றி கூறினார்.
கூடலூர் புதிய பஸ் நிலையம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு நகர தலைவர் பிரஜோத் தலைமை தாங்கினார். இந்து முன்னணி ஆட்டோ சங்க ஒன்றிய தலைவர் தினேஷ்குமார் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் ஆனந்தன், இந்து முன்னணி ஆலோசகர் வக்கீல் மாறன் ஆகியோர் பேசினர். ஆர்ப்பாட்டத்தில் பா.ஜனதா நிர்வாகிகள் சோமசேகர், சந்திரசேகர், இந்து முன்னணி மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராஜா, ஒன்றிய செயலாளர் சதீஷ், பந்தலூர் ஒன்றிய தலைவர் மனோஜ் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story