சிறுமியை கடத்தி கற்பழித்த வழக்கு: மதுரை வாலிபர்கள் உள்பட 5 பேர் குண்டர் சட்டத்தில் கைது


சிறுமியை கடத்தி கற்பழித்த வழக்கு: மதுரை வாலிபர்கள் உள்பட 5 பேர் குண்டர் சட்டத்தில் கைது
x
தினத்தந்தி 22 March 2018 2:41 AM IST (Updated: 22 March 2018 2:41 AM IST)
t-max-icont-min-icon

சிவகங்கையில் 15 வயது சிறுமியை கடத்தி கற்பழித்த வழக்கில் தொடர்புடைய மதுரை வாலிபர்கள் உள்பட 5 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

சிவகங்கை,

சிவகங்கையை அடுத்த பேரணிபட்டி பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமியை கடந்த மாதம் காரில் வந்த ஒரு கும்பல் கத்தியைகாட்டி மிரட்டி காரில் கடத்தி சென்றது. பின்னர் அந்த கும்பல் சிறுமியை கற்பழித்துவிட்டு மதகுபட்டியை அடுத்த கீழப்பூங்குடி பகுதியில் இறக்கிவிட்டு தப்பியோடிவிட்டது. இதுதொடர்பாக சிறுமி அளித்த புகாரின்பேரில் சிவகங்கை அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் இதுதொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் உத்தரவின்பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு மங்களேஸ்வரன் ஏற்பாட்டில் இன்ஸ்பெக்டர்கள் மோகன் தலைமையிலான போலீஸ் தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்த தனிப்படையினர் நடத்திய விசாரணையில், சிவகங்கையை அடுத்த மணக்குளம் கிராமத்தை சேர்ந்த பர்மா பாண்டி(30), இவரது தம்பி அருண்பாண்டி என்ற செல்வம்(27), மதுரை உத்தங்குடியை சேர்ந்த பிரபாகரன்(23), மதுரை எல்லீஸ்நகரை சேர்ந்த சிரஞ்சீவி(23) மற்றும் சென்னை புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த சுலைமான்(33) ஆகிய 5 பேர் கொண்ட கும்பலே சிறுமியை கடத்தி கற்பழித்தது தெரியவந்தது. இதனையடுத்து அவர்கள் 5 பேரையும் கடந்த மாதம் போலீசார் கைதுசெய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

இந்தநிலையில் பர்மா பாண்டி உள்பட 5 பேரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாவட்ட கலெக்டருக்கு, போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் பரிந்துரை செய்தார். கலெக்டர் உத்தரவை தொடர்ந்து பர்மா பாண்டி, இவரது தம்பி அருண்பாண்டி உள்பட 5 பேரும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். 

Related Tags :
Next Story