மகா விதாரன் நிறுவனத்துக்கு ரூ.39 ஆயிரம் கோடி கட்டண பாக்கி


மகா விதாரன் நிறுவனத்துக்கு ரூ.39 ஆயிரம் கோடி கட்டண பாக்கி
x
தினத்தந்தி 22 March 2018 3:01 AM IST (Updated: 22 March 2018 3:01 AM IST)
t-max-icont-min-icon

மராட்டியத்தில் மின் கட்டணம் செலுத்த தவறியவர்கள் மகாவிதாரன் நிறுவனத்துக்கு ரூ.39 ஆயிரம் கோடி பாக்கி வைத்து உள்ளனர். அந்த தொகையை வசூலிக்க மின் இணைப்பை துண்டிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

மும்பை,

மராட்டியத்தில் மாநில அரசின் மகாவிதாரன் நிறுவனம் மின் வினியோகம் செய்து வருகிறது. மின்நுகர்வோர்கள் சரியாக மின் கட்டணத்தை செலுத்தாததன் காரணமாக மகாவிதாரன் நிறுவனத்துக்கு கடும் நிதிச்சுமை ஏற்பட்டு உள்ளது. இது தொடர்பாக அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

கடந்த ஜனவரி மாதம் வரையிலான நிலவரப்படி 1 கோடியே 41 லட்சம் மின்நுகர்வோர்கள் மின்கட்டணத்தை சரிவர செலுத்தாமல் பாக்கி வைத்து உள்ளனர்.

மொத்தம் ரூ.39 ஆயிரம் கோடி மின் கட்டண பாக்கி உள்ளது. இது மின்வினியோகத்தில் மிகப்பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்த கூடும்.

எனவே அதுபோன்ற சூழல் ஏற்படாமல் அதிலிருந்து மீளும் நடவடிக்கையாக மாநிலம் முழுவதும் மின் கட்டணம் செலுத்த தவறியவர்களின் மின் இணைப்புகளை துண்டிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

உதய் மின் திட்டம் அறிமுகம் செய்யப்பட்ட பிறகு கடன் அளவு அதிகரித்து விட்டது. எனவே நூறு சதவீதம் மின்கட்டண பாக்கியை வசூலிக்க வேண்டிய தேவை ஏற்பட்டு உள்ளது. மின்நுகர்வோர்களுக்காக மகாவிதாரன் நிறுவனம் பல்வேறு சலுகைகளை நிறைவேற்றி உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story