லாரி மோதி விவசாயி பலி


லாரி மோதி விவசாயி பலி
x

லாரி மோதி விவசாயி பலியானார்.

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே வேடல் கிராமத்தை சேர்ந்தவர் கணேசன். இவரது மகன் ஜெயக்குமார் (வயது 23). விவசாயி. இவர் வேடலில் இருந்து மாட்டு வண்டியில் நெல்மூட்டைகளை ஏற்றிக்கொண்டு காஞ்சீபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

அப்போது காஞ்சீபுரத்திலிருந்து வந்த லாரி மாட்டு வண்டி மீது மோதியது.

இதில் படுகாயம் அடைந்த ஜெயக்குமார் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து மாகரல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story