தொழிலாளியை அடித்து கொன்ற வழக்கு மனைவி-மகன் உள்பட 3 பேர் கைது
குடிபோதையில் தகராறு செய்ததால் தீர்த்து கட்டி நாடகமாடியது அம்பலம்.
பெங்களூரு,
பெங்களூருவில் தொழிலாளியை அடித்து கொன்ற வழக்கில் மனைவி-மகன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில், குடிபோதையில் தகராறு செய்ததால் தீர்த்து கட்டி நாடகமாடியது தெரியவந்துள்ளது.
பெங்களூரு விஜயநகர் 11-வது கிராசில் உள்ள ஒரு கட்டிடத்தின் 3-வது மாடியில் வசித்து வந்தவர் கணேஷ் (வயது 47). தொழிலாளி. இவருடைய மனைவி உமா (37). இந்த தம்பதிக்கு 18 வயது நிரம்பாத சிறுவன் மகனாக இருக்கிறான்.
இந்த நிலையில், கடந்த ஜனவரி மாதம் 21-ந் தேதி கணேஷ் தனது வீட்டில் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். இதுதொடர்பாக உமா விஜயநகர் போலீசில் ஒரு புகார் செய்தார். அதில், ‘நானும் எனது மகனும் சிவமொக்காவில் உள்ள தந்தை வீட்டுக்கு ஜனவரி மாதம் 19-ந் தேதி சென்றோம். மீண்டும் 21-ந் தேதி வந்தபோது வீட்டில் தனியாக இருந்த கணேஷ் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். அவரை மர்மநபர்கள் வீடு புகுந்து கொலை செய்து உள்ளனர். இதுபற்றி விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்‘ என கூறியிருந்தார்.
இந்த புகாரின் பேரில் விஜயநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த விசாரணையின்போது போலீசாருக்கு உமாவின் மீது சந்தேகம் எழுந்தது. இதுதொடர்பாக கணேஷ் குடியிருந்த வீட்டு உரிமையாளர் நரசிம்ம மூர்த்தியிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, அவர் கூறிய தகவலின்பேரில் உமா மீதான சந்தேகம் போலீசாருக்கு வலுத்தது. இதனால் அவர் கணேசை கொலை செய்து நாடகமாடி இருக்கலாம் என்று போலீசார் சந்தேகித்தனர். அதன்படி, உமாவை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
விசாரணையின்போது, கணேசை கொலை செய்து நாடகமாடியதை உமா ஒப்பு கொண்டார். மேலும், கணவரை கொலை செய்வதற்கு உமாவுக்கு அவருடைய மகனும், உமாவின் தந்தை ராஜூவும் உடந்தையாக இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
கைதானவர்களிடம் நடத்திய விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின. இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘கணேஷ் குடிபோதையில் மனைவி உமா மற்றும் மகனை அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். இதுதொடர்பாக கடந்த ஜனவரி மாதம் 19-ந் தேதி ஏற்பட்ட தகராறில் உமாவும், அவருடைய மகனும் சேர்ந்து கணேசை இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்தனர். பின்னர், உமா தனது மகனுடன் சிவமொக்காவில் உள்ள தந்தை ராஜூ வீட்டுக்கு சென்றார். சம்பவம் குறித்து அவர் ராஜூவிடம் கூறி அழுதுள்ளார். இதையடுத்து கொலையை மறைக்கும் நோக்கத்தில் கொலைக்கு பயன்படுத்திய இரும்பு கம்பி மற்றும் ரத்தக்கறை படிந்த சேலையை வாங்கி ராஜூ யாருக்கு தெரியாமல் மறைத்து வைத்துள்ளார். பின்னர், மர்மநபர்கள் வீடு புகுந்து கணேசை கொலை செய்ததாக உமா போலீசில் புகார் செய்து நாடகமாடி சிக்கியது குறிப்பிடத்தக்கது‘ என்றனர்.

Related Tags :
Next Story