மராட்டியத்தை சேர்ந்த நர்சு மர்ம சாவு வழக்கில் அதிரடி திருப்பம் : சித்த மருத்துவர், சகோதரருடன் கைது
திருமணத்துக்கு வற்புறுத்தியதால் தீர்த்து கட்டியது அம்பலம் காதலனான சித்த மருத்துவர், சகோதரருடன் கைது செய்யப்பட்டார்.
பெங்களூரு,
பெலகாவி அருகே மராட்டியத்தை சேர்ந்த நர்சு மர்மமான முறையில் இறந்து கிடந்த வழக்கில் அதிரடி திருப்பம் ஏற்பட்டு உள்ளது. திருமணத்துக்கு வற்புறுத்தியதால் அவரை தீர்த்து கட்டியதாக காதலனான சித்த மருத்துவரை, சகோதரருடன் போலீசார் கைது செய்துள்ளனர்.
பெலகாவி மாவட்டம் கானாப்புரா தாலுகா அஸ்டோலி கிராமத்தில் உள்ள மேம்பாலத்தின் அடியில் ஓடும் கால்வாயில் கடந்த 15-ந் தேதி இளம்பெண் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் கானாப்புரா போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இளம்பெண்ணின் உடலை மீட்டார்கள். அந்த இடத்தில் கிடந்த ‘சிம்‘ கார்டு ஒன்றையும் போலீசார் கைப்பற்றி கொண்டனர்.
இதையடுத்து, அந்த ‘சிம்‘ கார்டில் இளம்பெண்ணின் குடும்ப நபர்களின் செல்போன் எண்கள் இருந்தன. அந்த எண்களை வைத்து போலீசார் தொடர்பு கொண்டு பேசினார்கள். அப்போது, இறந்த இளம்பெண்ணின் பெயர் பூனம் (வயது 22) என்பதும், அவர் மராட்டிய மாநிலம் அகமத் நகர் மாவட்டத்தை சேர்ந்த நர்சு என்பதும் தெரியவந்தது. அத்துடன், பூனமின் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறிய அவரது குடும்பத்தினர், பூனம் கொலை செய்யப்பட்டு உள்ளதாக போலீசில் புகாரும் அளித்தனர்.
இந்த புகாரை பெற்று கொண்ட போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர். பூனமின் குடும்பத்தினர் கொடுத்த தகவலின் பேரில் அவருடைய காதலன் சுனில் சவுகான் (25) என்பவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். அப்போது, அவர் தனது சகோதரர் சஞ்சய் உதவியுடன் காதலி பூனத்தை கொலை செய்ததை ஒப்பு கொண்டார்.
இதையடுத்து மர்ம சாவு வழக்கை கொலை வழக்காக மாற்றிய போலீசார் சுனில் சவுகான், சஞ்சய் ஆகியோரை நேற்று முன்தினம் கைது செய்தனர். கைதான 2 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தினார்கள். இந்த விசாரணையின்போது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அதுபற்றி போலீசார் கூறியதாவது:-
கைதான சுனில் சவுகான் சித்த மருத்துவர். இவரும் அகமத் நகர் மாவட்டத்தை சேர்ந்தவர். நர்சாக இருந்த பூனமும், சுனில் சவுகானும் ஒரே மருத்துவமனையில் பணி செய்து உள்ளனர். இதனால் 2 பேருக்கும் ஏற்பட்ட பழக்கம் காதலாக மாறியது. இதையடுத்து 2 பேரும் ஒன்றாக சேர்ந்து பல்வேறு இடங்களுக்கு சுற்றியுள்ளனர். மேலும், திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறிய சுனில் சவுகான், பூனத்துடன் உல்லாசம் அனுபவித்து உள்ளதாக கூறப்படுகிறது.
பின்னர், பூனம் வேறு சாதியை சேர்ந்தவர் என்பதால் சுனில் சவுகான் திருமணத்துக்கு மறுத்துள்ளதாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த பூனம், தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி அடிக்கடி சுனில் சவுகானிடம் வற்புறுத்தி வந்துள்ளார். இதன் காரணமாக பூனம் மீது சுனில் சவுகானுக்கு வெறுப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், அவரை கொலை செய்ய அவர் திட்டம் தீட்டியுள்ளார். இதுகுறித்து அவர் தனது சகோதரரான சஞ்சயிடம், சுனில் சவுகான் கூறியுள்ளார். அவரும் பூனத்தை கொலை செய்ய சம்மதம் தெரிவித்து உள்ளார்.
அதன்படி, சம்பவத்தன்று சுனில் சவுகான், அவருடைய காதலி பூனத்திடம் கோவாவுக்கு சுற்றுலா அழைத்து செல்வதாக கூறி ஏமாற்றி காரில் பெலகாவி மாவட்டம் கானாப்புரா அஸ்டோலி கிராமத்துக்கு அழைத்து வந்துள்ளார். அப்போது, சுனில் சவுகானுடன், சஞ்சயும் வந்துள்ளார்.
அஸ்டோலி கிராமத்தில் வைத்து அவர்கள் 2 பேரும் சேர்ந்து பூனமின் கழுத்தை நெரித்து கொலை செய்து உடலை பாலத்தின் அடியில் செல்லும் கால்வாயில் வீசி சென்றது தெரியவந்துள்ளது. கைதான 2 பேரும் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

Related Tags :
Next Story