காவிரி பிரச்சினையில் கர்நாடக எம்.பி.க்கள் ஒற்றுமையாக செயல்பட வேண்டும் தேவேகவுடா வேண்டுகோள்
காவிரி பிரச்சினையில் கர்நாடக எம்.பி.க்கள் ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என்று தேவேகவுடா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பெங்களூரு,
முன்னாள் பிரதமரும், ஜனதா தளம்(எஸ்) கட்சியின் தேசிய தலைவருமான தேவேகவுடா டெல்லியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு இருப்பது குறித்து விவாதிக்க கர்நாடக அரசு எம்.பி.க்களின் கூட்டத்தை நாளை (அதாவது இன்று) கூட்டியுள்ளது. இதில் நான் கலந்து கொள்வேன். இதில் கர்நாடகத்தை சேர்ந்த மத்திய மந்திரிகளும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும். ஏனென்றால் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விஷயத்தில் தற்போது ‘பந்து‘ மத்திய அரசின் ‘கோர்ட்‘டில் உள்ளது.
நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடப்பதால் பா.ஜனதா எம்.பி.க்கள் கூட்டத்திற்கு வருகிறார்களோ, இல்லையோ தெரியவில்லை. இந்த விஷயத்தில் நான் ஒரு திட்டத்தை தயாரித்து அரசிடம் கொடுத்துள்ளேன். காவிரி பிரச்சினையில் தமிழ்நாட்டில் அனைத்துக்கட்சிகளின் எம்.பி.க்களும் ஒற்றுமையாக உள்ளனர். அதே போல் கர்நாடகத்திலும் அனைத்துக்கட்சிகளின் எம்.பி.க்களும் ஒற்றுமையாக செயல்பட வேண்டியது அவசியம்.
டெல்லி மேல்-சபை தேர்தலில் எங்கள் கட்சியை சேர்ந்த 7 எம்.எல்.ஏ.க்கள் கட்சி மாறி ஓட்டுப்போட்டனர். அவர்களை தகுதி நீக்கம் செய்யக் கோரி நாங்கள் சபாநாயகரிடம் மனு கொடுத்துள்ளோம். இந்த விஷயத்தில் சபாநாயகர் என்ன முடிவை அறிவிக்கப்போகிறார் என்பது எனக்கு தெரியாது.
பேச்சுவார்த்தைக்கு தயார் என்று இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள பாலகிருஷ்ணா எம்.எல்.ஏ. கூறியுள்ளார். செய்த தவறை ஒப்புக்கொண்ட கோபாலய்யா எம்.எல்.ஏ.வை நாங்கள் மன்னித்து ஏற்றுக்கொண்டோம். முதலில் சபாநாயகர் தனது தீர்ப்பை வெளியிடட்டும். அதன் பிறகு பேச்சுவார்த்தை பற்றி ஆலோசிக்கலாம்.
குமாரசாமி 2 தொகுதியில் போட்டியிடுவதில் எனக்கு ஆட்சேபனை இல்லை. சென்னபட்டணா தொகுதியில் போட்டியிட சரியான வேட்பாளர்கள் எங்கள் கட்சியில் இல்லை. அனிதா குமாரசாமியும் போட்டியிடுவது இல்லை என்று கூறியுள்ளார். நான் முன்பு சாத்தனூர் மற்றும் ஒலேநரசிபுரா ஆகிய 2 தொகுதியில் போட்டியிட்ட வரலாறு உண்டு. இவ்வாறு தேவேகவுடா கூறினார்.

Related Tags :
Next Story