சக ஊழியர்களின் நெகிழ்ச்சி செயல்!


சக ஊழியர்களின் நெகிழ்ச்சி செயல்!
x
தினத்தந்தி 24 March 2018 5:45 AM IST (Updated: 22 March 2018 3:27 PM IST)
t-max-icont-min-icon

ஜெர்மனியில் புற்றுநோய் பாதித்த ஊழியரின் மகனுக்காக சக ஊழியர்கள் அனைவரும் 3 ஆயிரம் மணி நேரம் கூடுதலாக வேலை பார்த்த நெகிழ்ச்சியான சம்பவம் நடந்திருக்கிறது.

ஜெர்மனியின் ஹெசன் மாகாணத்தில் உள்ள புரோன்ஹாசன் பகுதியில் வசித்து வருபவர், ஆண்ட்ரியாஸ் கிராப் என்ற 36 வயது நபர். சில வருடங்களுக்கு முன் ஆண்ட்ரியாசின் மனைவி மாரடைப்பால் இறந்துவிட்டார்.

மனைவியை இழந்த துக்கத்தில் இருந்த ஆண்ட்ரியாசுக்கு கூடுதல் அதிர்ச்சியாக, அவரது மகன் ஜூலியசும் ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்திருக் கிறது.

மனைவி இல்லாத நிலையில் தற்போதைக்கு தானே மகனை மருத்துவமனையில் அருகில் இருந்து கவனித்துக்கொள்ள வேண்டும், மேலும் ஓராண்டு காலம் விடுப்பு எடுக்க வேண்டும் என்ற நிலை ஏற்பட்டதால் குழப்பத்தில் தவித்தார், ஆண்ட்ரியாஸ்.

ஆண்ட்ரியாஸ் அதுகுறித்து தான் பணிபுரிந்து வந்த நிறுவனத்தின் மனிதவள மேலாளரிடம் தெரியப்படுத்தியுள்ளார். உடனே நிறுவன ஊழியர்களுக்கு மேலாளர் தரப்பில் இருந்து ஒரு வேண்டுகோள் விடுக்கப்பட்டிருக்கிறது.

அதாவது, ஆண்ட்ரியாஸ் அலுவலகம் வர முடியாத நாட்களை ஈடுசெய்யும் விதமாக சக ஊழியர்கள் கூடுதல் நேரம் வேலை செய்ய வேண்டும் என்று கோரப்பட்டது.

சுமார் இரண்டு வார காலத்துக்கு ஒவ்வொரு ஊழியரும் சராசரியாக 5 மணி நேரம் கூடுதலாகப் பணியாற்றிட வேண்டும் என்ற வேண்டுகோள் முன்வைக்கப்பட்டது. அதை ஏற்று, நிறு வனத்தில் பணிபுரியும் 650 நபர்களும் மொத்தமாக 3 ஆயிரம் 300 மணி நேரம் பணி செய்திருக்கின்றனர்.

ஆண்ட்ரியாசுக்காக இப்படி வேலை செய்தவர் களில், அவரை அறியாதவர்களும், புதிதாக வேலைக்குச் சேர்ந்தவர் களும் அடக்கம்.

இதனால் தனது வேலை காப்பாற்றப்பட்டிருப்பதாகவும், ஊழியர்கள் அனை வருக்கும் தாம் நன்றிக் கடன்பட்டிருப்பதாகவும் ஆண்ட்ரியாஸ் ஆனந்தக் கண்ணீர் மல்கக் கூறி யிருக்கிறார்.

மற்றொரு நல்ல செய்தியாக, மகனின் சிகிச்சைக்காக சுமார் ஓராண்டு கால விடுப்பு தேவைப்படும் என்று நினைத்திருந்த நிலையில், அவன் சுமார் 9 மாத சிகிச்சையிலேயே ஓரளவு குணம் பெற்றுவிட்டான். தற்போது பள்ளி செல்லவும் தயாராகிவிட்டான்.

நல்ல மனங்கள் வாழ்க!

Next Story