அதிசய இரட்டைச் சகோதரிகள்!
இங்கிலாந்தில் இரட்டைச் சகோதரிகளில் ஒருவர் வெள்ளை நிறத்திலும், மற்றொருவர் கருப்பு நிறத்திலும் வலம்வருவது பலரையும் வியப்பில் ஆழ்த்துகிறது.
இரட்டைச் சகோதரிகளின் பெயர் மார்சியா- மில்லி பிக்ஸ். இவர்களுக்கு வயது 11.
மார்சியா நீல நிறக் கண்கள், பொன்னிற முடியுடன் வெள்ளை நிறத்தில் உள்ளார். இன்னொருவரான மில்லி பிக்ஸ், பழுப்பு நிறக் கண்கள், கருப்பு முடியுடன் கருப்பு நிறத் தோற்றத்தில் உள்ளார்.
சகோதரிகள் இருவரும் இருவிதத் தோற்றத்தில் இருப்பதற்குக் காரணம் இருக்கிறது. இவர்களின் தாய் ஐரோப்பிய வம்சாவளியைச் சார்ந்த வெள்ளை இனப்பெண், தந்தை ஜமைக்காவைச் சேர்ந்த ஆப்பிரிக்க வம்சாவளிக்காரர்.
மார்சியாவும் மில்லியும் பிறக்கும்போது ஒரே மாதிரியாகத்தான் இருந்தார்களாம். ஆனால் சுமார் 10 மாதங்களுக்குப் பின்னர் சகோதரிகளின் தோல் நிறத்தில் மாற்றம் ஏற்படத் தொடங்கியதாக இவர்களின் பெற்றோர் கூறுகின்றனர்.
முதலில் மில்லிக்குதான் தோலில் மாற்றம் ஏற்பட்டு, கருப்பு நிறத்தில் மாறியதாம்.
நிறத்தில் வேறுபட்டாலும், சகோதரிகள் இருவரும் குணத்தில் ஒரே மாதிரிதானாம். ஒருவருக்கு ஒருவர் பாசத்தைப் பொழிவதில் குறைவே இல்லையாம்.
மனிதப் பிறப்பில் அதிசயங்களுக்கு முடிவு ஏது?
Related Tags :
Next Story