ராமராஜ்ய ரதயாத்திரை தூத்துக்குடி வந்தது இந்து அமைப்பினர் உற்சாக வரவேற்பு


ராமராஜ்ய ரதயாத்திரை தூத்துக்குடி வந்தது இந்து அமைப்பினர் உற்சாக வரவேற்பு
x
தினத்தந்தி 23 March 2018 2:30 AM IST (Updated: 22 March 2018 6:13 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடிக்கு வந்த ராமராஜ்ய ரதயாத்திரைக்கு இந்து அமைப்பினர் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.

தூத்துக்குடி,

தூத்துக்குடிக்கு வந்த ராமராஜ்ய ரதயாத்திரைக்கு இந்து அமைப்பினர் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.

ரதயாத்திரை

அயோத்தியில் இருந்து ராமராஜ்ய ரதயாத்திரை தொடங்கப்பட்டது. இந்த ரதம் பல்வேறு மாநிலங்களை கடந்து கடந்த 20–ந் தேதி நெல்லை மாவட்டம் செங்கோட்டை வழியாக தமிழ்நாட்டுக்கு வந்தது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். அதன்பிறகு ரதயாத்திரை நெல்லை மாவட்டத்தில் இருந்து மதுரை வழியாக ராமேசுவரத்துக்கு சென்றது. ராமேசுவரத்தில் இருந்து நேற்று காலை தூத்துக்குடி மாவட்டத்துக்கு வந்தது.

உற்சாக வரவேற்பு

மாவட்ட எல்லையான சூரங்குடியில் இந்துமுன்னணியினர், பா.ஜனதா கட்சியினர் உள்பட இந்து அமைப்பினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து வேம்பார், குளத்தூர், தருவைகுளம், புதூர்பாண்டியாபுரம் வழியாக மதியம் 12–30 மணி அளவில் தூத்துக்குடி இந்திய உணவுக்குடோன் அருகே வந்தது. அங்கிருந்து புதுக்கோட்டைக்கு சென்றது. அங்கு பா.ஜனதா கட்சி மாவட்ட தலைவர் பாலாஜி தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் ரதம் நெல்லைக்கு புறப்பட்டு சென்றது. அங்கிருந்து கன்னியாகுமரி வழியாக திருவனந்தபுரத்தில் ரதயாத்திரை நிறைவடைகிறது.

மீண்டும் ரதயாத்திரை நடத்தப்படும்

முன்னதாக ரதயாத்திரையில் வந்த சக்தி சாந்தானந்த மகரிஷி கூறும் போது, ‘இந்த யாத்திரை கடந்த மாதம் 13–ந் தேதி அயோத்தியில் இருந்து தொடங்கியது. 7 ஆயிரத்து 500 கிலோ மீட்டர் பயணம் செய்து ராமநவமி அன்று திருவனந்தபுரத்தில் நிறைவடைகிறது. இந்த ரதயாத்திரை ராமராஜ்யம் அமைய வேண்டும். தர்ம ராஜ்யம் அமைய வேண்டும். சாதி, மதம் பேதம் இன்றி அனைத்து மக்களும் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்ற நோக்கத்தில் நடத்தப்படுகிறது.

இந்த ரதயாத்திரை அடுத்த ஆண்டு(2019) மீண்டும் ராமேசுவரத்தில் இருந்து புறப்பட்டு 9 மாநிலங்கள் வழியாக சென்று அயோத்தியில் முடிவடையும். அங்கு ராமராஜ்யம் உருவாகும். மேலும் 120 கிறிஸ்தவ நாடுகளில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறையாக உள்ளது. 54

இஸ்லாமிய நாடுகளில் வெள்ளிக்கிழமை விடுமுறை. ஆகையால் வேதம் படித்த பாரத நாட்டில் வியாழக்கிழமை விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டும். இந்த ரதயாத்திரைக்கு பலர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்த ரதயாத்திரை தமிழ்நாட்டுக்கு வந்த போது சிலர் எதிர்ப்பு தெரிவித்தார்கள். ராமராஜ்யம் வேண்டும் என்று கூறியவர் மகாத்மா காந்தி. ஆர்.எஸ்.எஸ் அல்ல. ஆகையால் ராமராஜ்யம் உருவாகும்’ என்று கூறினார்.

Next Story