சங்கரன்கோவில் அருகே விசைத்தறி தொழிலாளர்கள் 6–வது நாளாக வேலை நிறுத்தம் ரூ.30 லட்சம் மதிப்பிலான துணிகள் உற்பத்தி பாதிப்பு
சங்கரன்கோவில் அருகே விசைத்தறி தொழிலாளர்கள் நேற்று 6–வது நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் ரூ.30 லட்சம் மதிப்பிலான துணிகள் உற்பத்தி பாதிக்கப்பட்டது.
சங்கரன்கோவில்,

6–வது நாளாக வேலை நிறுத்தம்
நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் தாலுகா சுப்புலாபுரத்தில் சுமார் 80–க்கும் மேற்பட்ட விசைத்தறி கூடங்கள் அமைந்துள்ளன. இதில் 1000–க்கும் மேற்பட்ட விசைத்தறி தொழிலாளர்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் பணி செய்து வருகின்றனர். இங்கு உற்பத்தியாகும் துணி வகைகளை இந்தியாவின் பல்வேறு இடங்களுக்கு அனுப்புவதற்காக 75 சதவீத கூலி உயர்வு வேண்டும். தேசிய பண்டிகை விடுமுறைக்கு ரூ.300 வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி சங்கரன்கோவில் அருகே உள்ள சுப்புலாபுரத்தில் விசைத்தறி தொழிலாளர்கள் கடந்த 17–ந் தேதி முதல் தொடர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விசைத்தறி தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் நேற்று 6–வது நாளாக நீடித்தது. இதில் ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.
ரூ.30 லட்சம் துணிகள் பாதிப்பு
விசைத்தறி தொழிலாளர்களின் தொடர் வேலை நிறுத்தம் காரணமாக இதுவரை ரூ.30 லட்சம் மதிப்பிலான துணிகள் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் கூறுகையில், எங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 17–ந் தேதி முதல் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகிறோம். எங்களது கோரிக்கைகள் நிறைவேற்றும் வரை வேலை நிறுத்த போராட்டம் தொடரும் என்று தெரிவித்தனர்.

Related Tags :
Next Story