புறவழிச்சாலை வழியாக கன்னியாகுமரி சென்றது நெல்லை நகருக்குள் வர ராமராஜ்ய ரதத்துக்கு அனுமதி மறுப்பு
நெல்லை நகருக்குள் வர ராமராஜ்ய ரதத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதையடுத்து ரதம், புறவழிச்சாலை வழியாக கன்னியாகுமரி சென்றது.
நெல்லை,

ராமராஜ்ய ரதம்
விசுவ இந்து பரிஷத் ஆதரவு அமைப்பு சார்பில் அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வேண்டும் உள்பட பல்வேறு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் இருந்து கடந்த மாதம் (பிப்ரவரி) 13–ந் தேதி ராமராஜ்ய ரதம் புறப்பட்டது.
இந்த ரதம் கடந்த 20–ந் தேதி (செவ்வாய்க்கிழமை) கேரள மாநிலத்தில் இருந்து நெல்லை மாவட்டம் புளியரை வழியாக தமிழகம் வந்தது. தொடர்ந்து விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம், மதுரை, தூத்துக்குடி வழியாக மீண்டும் நேற்று பாளையங்கோட்டைக்கு வந்தது.
வரவேற்பு
பகல் 3 மணி அளவில் பாளையங்கோட்டை அரியகுளம் சாரதா கல்லூரிக்கு வந்தது. பக்தானந்தசுவாமி தலைமையில் ரதத்துக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. ரதத்தில் உள்ள ராமர், சீதை சிலைகளுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. கல்லுரி மாணவிகள் வரிசையில் நின்று ரதத்தை பார்வையிட்டனர். 3.50 மணி அளவில் ரதம் புறப்பட்டது.
கே.டி.சி.நகர் பகுதிக்கு மாணவிகள், இந்து அமைப்பினர் ரதத்தை ஊர்வலமாக அழைத்து வந்தனர். சீனிவாசநகர் பகுதியில் பாரதீய ஜனதா, இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ். சார்பில் ரதத்துக்கு வரவேற்பு கொடுக்கப்பட்டது. நிகழ்ச்சியில் பாரதீய ஜனதா கட்சியின் நெல்லை கிழக்கு மாவட்ட தலைவர் தயா சங்கர், நிர்வாகிகள் சுரேஷ், பாலாஜி கிருஷ்ணசாமி, மகராஜன், இந்து முன்னணி மாநில துணைத்தலைவர் வி.பி.ஜெயக்குமார், குற்றலாநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அனுமதி மறுப்பு
ராமராஜ்ய ரதம் நெல்லை மாநகர பகுதிக்குள் வருவதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. அதனால் ரதம் புறவழிச்சாலை வழியாக கன்னியாகுமரிக்கு சென்றது. செல்லும் வழியில் வள்ளியூர் மற்றும் அந்த பகுதியில் உள்ள ஊர்களில் ரதத்துக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதையொட்டி நெல்லை மாநகர பகுதியில் போலீஸ் கமிஷனர் (கூடுதல் பொறுப்பு) கபில்குமார் சரத்கர் உத்தரவின் பேரில், துணை போலீஸ் கமிஷனர்கள் சுகுணாசிங், பெரோஸ்கான் அப்துல்லா ஆகியோர் தலைமையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

Related Tags :
Next Story