சுங்குவார்சத்திரத்தில் லாரிகள் மோதல்; டிரைவர் பலி
நெல்லை மாவட்டம் நாங்குநேரி தாலுகா இளையார்குளம் பகுதியை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் அரவிந்த் (வயது 24). காஞ்சீபுரத்தில் வசித்து வந்தார்.
வாலாஜாபாத்,
லாரி டிரைவரான இவர் காஞ்சீபுரத்தில் இருந்து சென்னைக்கு மினிலாரியில் பால் ஏற்றிக்கொண்டு சென்றுகொண்டிருந்தார். சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை சுங்குவார்சத்திரத்தில் சென்று கொண்டிருந்த போது மினிலாரியின் டயர் பஞ்சரானது. அதை சரி செய்து கொண்டிருந்தபோது அந்த வழியாக வந்த கன்டெய்னர் லாரி, பால் ஏற்றி வந்த மினிலாரி மற்றும் அரவிந்த் மீது மோதியது.
இதில் படுகாயம் அடைந்த அரவிந்த் அதே இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து சுங்குவார்சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜான் விக்டர் மற்றும் போலீசார் விரைந்து வந்து அரவிந்த் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Tags :
Next Story