புதுச்சேரி சட்டசபையில் 26-ந்தேதி கவர்னர் உரையாற்றுகிறார்
புதுவை சட்டசபையில் வருகிற 26-ந்தேதி கவர்னர் உரையாற்றுகிறார். இதன்பின் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.
புதுச்சேரி,
புதுவை சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் ஆண்டுதோறும் மார்ச் மாத இறுதியில் நடைபெறுவது வழக்கம். ஆனால் கடந்த 2011-ம் ஆண்டு முதல் மார்ச் மாதத்தில் முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்படாமல் இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்யப்படுவது வழக்கத்தில் உள்ளது.
இந்தநிலையில் புதுவை சட்டசபை கூட்டம் வருகிற 26-ந்தேதி காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது. ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் கவர்னர் கிரண்பெடி உரையாற்றுகிறார். அவரது உரையை தொடர்ந்து இடைக்கால பட்ஜெட்டை அன்றையதினம் முதல்- அமைச்சர் நாராயணசாமி தாக்கல் செய்கிறார்.
இதுகுறித்து புதுவை சட்டசபை செயலாளர் வின்சென்ட்ராயர் விடுத்துள்ள செய்திக் குறிப்பில், வருகிற 26-ந்தேதி கவர்னரின் உரைக்குப்பின் 2018-19 ஆம் ஆண்டிற்கான இடைக்கால நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) சட்ட சபையில் முன்னிலைப்படுத்தப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த கூட்டத்தை 3 நாட்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கிடையே இந்த சட்டமன்ற கூட்டத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்துவது, சென்டாக், வரி உயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதிக்க வேண்டும் என்று அ.தி.மு.க. மற்றும் ஆளும் காங்கிரஸ் அரசின் கூட்டணி கட்சியான தி.மு.க. போன்ற கட்சிகளும் வலியுறுத்தி உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Related Tags :
Next Story