ஓசூரில் விசுவ இந்து பரிஷத் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

ஓசூரில் விசுவ இந்து பரிஷத் அமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஓசூர்,
ராமராஜ்ய ரத யாத்திரையை, திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி இழிவாக பேசியதாக கண்டனம் தெரிவித்து கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில், விசுவ இந்து பரிஷத் அமைப்பின் சார்பில், கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு விசுவ இந்து பரிஷத் அமைப்பின் கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகி சாந்தகுமார் தலைமை தாங்கினார். நாகு முன்னிலை வகித்தார். இதில், பஜ்ரங்தள் அமைப்பின் மாவட்ட செயலாளர் தேவராஜ் மற்றும், நிர்வாகிகள் கலந்துகொண்டு கோரிக்கைகள் குறித்து விளக்கி பேசினர்.
உருவப்படம் எரிப்பு
ஆர்ப்பாட்டத்தின் போது கி.வீரமணிக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பினார்கள். மேலும், கி.வீரமணியின் உருவப்படத்தை விசுவ இந்து பரிஷத் அமைப்பினர் தீயிட்டு எரித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் அமைப்பின் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Tags :
Next Story