உடற்பயிற்சி கூடத்தில் டி.வி. நடிகையை மானபங்கம் செய்தவர் கைது


உடற்பயிற்சி கூடத்தில் டி.வி. நடிகையை மானபங்கம் செய்தவர் கைது
x
தினத்தந்தி 23 March 2018 4:08 AM IST (Updated: 23 March 2018 4:08 AM IST)
t-max-icont-min-icon

உடற்பயிற்சி கூடத்தில் டி.வி. நடிகையை மானபங்கம் செய்தவர் கைது செய்யப்பட்டார்.

மும்பை,

மும்பையை சேர்ந்த டி.வி. நடிகை ஒருவர் தனது தோழியுடன் அங்குள்ள உடற்பயிற்சி கூடத்துக்கு சென்று வருவது வழக்கம். சம்பவத்தன்றும் இவர் தோழியுடன் உடற்பயிற்சி கூடத்துக்கு சென்றிருந் தபோது, டி.வி. நடிகையின் தோழிக்கும், அங்கு வந்திருந்த ஒருவருக்கும் இடையே திடீரென சண்டை ஏற்பட்டு உள்ளது.

இதை பார்த்து கோபம் அடைந்த டி.வி. நடிகை தனது தோழிக்கு ஆதரவாக அந்த நபரிடம் சத்தம்போட்டு உள்ளார்.

இதில், கோபம் அடைந்த அந்த நபர் டி.வி. நடிகையின் உடலில் தொடக்கூடாத இடங்களில் தொட்டு மானபங்கம் செய்ததாகவும், மிகவும் ஆபாசமாக பேசியதாகவும் கூறப்படுகிறது.

இதுபற்றி டி.வி. நடிகை அம்போலி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் டி.வி. நடிகையை மானபங்கம் செய்தவர் பெயர் விஸ்வநாத் என்பது தெரியவந்தது. அவர் கைது நடவடிக்கைக்கு பயந்து தலைமறைவாகி விட்டார்.

இந்தநிலையில், அவர் அந்தேரி வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அந்தேரியில் குறிப்பிட்ட இடத்திற்கு வந்த விஸ்வநாத்தை மடக்கிப் பிடித்து கைது செய்தனர். 

Next Story