வள்ளியூர் அருகே மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்ட இடத்தை உதவி கலெக்டர் ஆய்வு சோதனை சாவடிகளில் தீவிரமாக கண்காணிக்க உத்தரவு
வள்ளியூர் அருகே மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்ட இடத்தை உதவி கலெக்டர் ஆய்வு நடத்தினார்.
வள்ளியூர்.
வள்ளியூர் அருகே மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்ட இடத்தை உதவி கலெக்டர் ஆய்வு நடத்தினார்.
மருத்துவ கழிவுகள்
நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே வில்வனம்புதூர் அருகில் கல்குவாரி ஒன்று செயல்பட்டு வந்தது. இந்த கல்குவாரியின் பள்ளங்களில் மருத்துவ கழிவுகள் கொட்டப்படுவதாக புகார் எழுந்தது. அதுவும் கேரளாவில் இருந்து சட்ட விரோதமாக கொண்டு வரப்பட்டு இங்கு கொட்டப்படுவதாக கூறப்படுகிறது.
இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு, கிராமங்களில் மக்கள் குடியிருக்க முடியாத நிலை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகத்திடம் கிராம மக்கள் முறையிட்டனர்.
உதவி கலெக்டர் ஆய்வு
இந்தநிலையில் மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்ட கல்குவாரிக்கு சேரன்மாதேவி உதவி கலெக்டர் ஆகாஷ் நேற்று சென்றார். அவர், மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டுள்ளதை பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். இதுதொடர்பாக அங்கிருந்தவர்களிடம் விசாரணை நடத்தினார்.
பின்னர் உதவி கலெக்டர் ஆகாஷ் கூறுகையில், மருத்துவ கழிவுகளை கொட்டியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கொட்டப்பட்ட கழிவுகளை அகற்ற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வள்ளியூர் பகுதியில் உள்ள சோதனை சாவடிகளில் தீவிர கண்காணிப்பு செய்ய போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மருத்துவ கழிவுகள் குறித்த ஆய்வு அறிக்கை மாவட்ட நிர்வாகத்துக்கு சமர்ப்பிக்கப்படும் என்றார்.
அப்போது ராதாபுரம் தாசில்தார் புகாரி, வள்ளியூர் யூனியன் ஆணையாளர் ருக்மணி மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Related Tags :
Next Story