3 ரவுடிகள் குண்டர் சட்டத்தில் கைது
தாம்பரம் பகுதியில் குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட 3 ரவுடிகளை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தாம்பரம்,
சென்னை புறநகர் பகுதிகளில் குற்ற சம்பவங்களில் ஈடுபடும் சமூக விரோதிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும்படி சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி சென்னை புறநகர் பகுதியான தாம்பரத்தில் குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட குற்றவாளிகளை பிடிக்க பரங்கிமலை துணை கமிஷனர் முத்துசாமி மேற்பார்வையில், தாம்பரம் உதவி கமிஷனர் அசோகன், தாம்பரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரவீன் தலைமையில் தனிப்படையினர் தீவிரமாக தேடுதல் வேட்டை நடத்தி வந்தனர்.
இந்தநிலையில் சென்னையை அடுத்த தாம்பரம் திருநீர்மலை சாலை அற்புதம் நகரைச் சேர்ந்த சின்னஅப்புனு என்ற பிரதீப்குமார் (வயது 28), மணிகண்டன் என்ற கோல்டுமணி (22), சுரேஷ் என்ற புட்டிசுரேஷ் (22) ஆகிய 3 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
கைதான இவர்கள் 3 பேரும் ரவுடிகள் ஆவர். இவர்கள் மீது வழிப்பறி, நகை பறிப்பு, அடிதடி உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. எனவே கைதான 3 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன் உத்தரவிட்டார். இதையடுத்து 3 பேரும் குண்டர் சட்டத்தில் கைது செய்து புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Related Tags :
Next Story