மணல் கடத்தல்; 5 பேர் கைது


மணல் கடத்தல்; 5 பேர் கைது
x
தினத்தந்தி 24 March 2018 3:45 AM IST (Updated: 24 March 2018 12:07 AM IST)
t-max-icont-min-icon

மணல் கடத்தல் தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் அடுத்த செவிலிமேடு பள்ளக்காலனி பாலாறு பகுதியில் மோட்டார் சைக்கிளில் மணல் கடத்தப்படுவதாக காஞ்சீபுரம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் வெற்றிச்செல்வனுக்கு தகவல் கிடைத்தது. அதையொட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தர்மலிங்கம் போலீசாருடன் அங்கு விரைந்து சென்றார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் மணல் கடத்தியது தெரிய வந்தது. அதையொட்டி செவிலிமேடு அம்பேத்கர் நகரை சேர்ந்த முருகன் (வயது44) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் காஞ்சீபுரம் அடுத்த கன்னடியன்குடிசை, ஆசூர் பகுதியில் மாட்டு வண்டியில் மணல் கடத்தப்படுவதாக மாகரல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவசங்கருக்கு புகார்கள் வந்தது. அதையொட்டி அவர் அந்த பகுதிக்கு விரைந்தார். அப்போது அங்கு மாட்டு வண்டிகளில் மணல் கடத்தியது தெரியவந்தது. அதையொட்டி தம்மனூரை சேர்ந்த அண்ணாதுரை (32), கன்னடியன்குடிசையை சேர்ந்த முருகன் (45), மேல்புதூரை சேர்ந்த ராமு (38), ஆசூரை சேர்ந்த முருகன் (38) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

திருவள்ளூரை அடுத்த செவ்வாப்பேட்டை சப்-இன்ஸ்பெக்டர் தட்சிணாமூர்த்தி மற்றும் போலீசார் நேற்று முன்தினம் திருவள்ளூரை அடுத்த புட்லூர் பகுதியில் உள்ள கூவம் ஆற்றங்கரையோரம் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு மணல் கடத்தலில் ஈடுபட்டவர்கள் மோட்டார் சைக்கிள்களை விட்டு விட்டு தப்பி ஓடினர். இதில் போலீசார் 2 மோட்டார் சைக் கிள்களை பறிமுதல் செய்தனர்.

இது குறித்து செவ்வாப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய நபர்கள் யார்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story