குரங்கணி காட்டுத்தீ விபத்து: சாவு எண்ணிக்கை 20 ஆக உயர்வு


குரங்கணி காட்டுத்தீ விபத்து: சாவு எண்ணிக்கை 20 ஆக உயர்வு
x
தினத்தந்தி 24 March 2018 5:30 AM IST (Updated: 24 March 2018 12:34 AM IST)
t-max-icont-min-icon

குரங்கணி காட்டுத்தீ விபத்தில் மதுரையில் நேற்று மேலும் 2 பெண்கள் இறந்ததையடுத்து, சாவு எண்ணிக்கை 20 ஆக உயர்ந்தது.

மதுரை,

தேனி மாவட்டம் போடியை அடுத்த குரங்கணி காட்டுப்பகுதியில் கடந்த 11-ந் தேதி தீப்பிடித்தது. இதில் மலையேற்ற பயிற்சிக்கு சென்ற 36 பேர் சிக்கிக் கொண்டனர். இவர்களில் பலர் உயிருடன் மீட்கப்பட்டனர். 9 பேர் சம்பவ இடத்திலேயே பிணமானார்கள்.

தீக்காயம் அடைந்தவர்கள், மதுரை, கோவை, சென்னை மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர். இவர்களில் 9 பேர் அடுத்தடுத்து இறந்து போனார்கள்.

இந்த நிலையில் மதுரை தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த தஞ்சை சாய்வசுமதி (வயது 26), சென்னை நங்கநல்லூர் நிவ்யபிரக்ருதி (24) ஆகியோர் நேற்று சிகிச்சை பலனின்றி இறந்து விட்டனர்.

இதையடுத்து, குரங்கணி காட்டுத் தீயில் இறந்தவர்கள் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்தது.

மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சுவேதா (28) என்பவர் நேற்று உயர்தர சிகிச்சைக்காக சென்னை கொண்டு செல்லப்பட்டார்.

தீ விபத்தில் காயம் அடைந்த உடுமலைப்பேட்டையை சேர்ந்த சிவசங்கரி மதுரை அரசு ஆஸ்பத்திரியிலும், கேரளாவை சேர்ந்த மீனா மதுரை தனியார் ஆஸ்பத்திரியிலும் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். 

Next Story