ஈரோட்டில் வக்கீல் வீட்டின் பூட்டை உடைத்து 35 பவுன் நகை கொள்ளை
ஈரோட்டில் வக்கீல் வீட்டின் பூட்டை உடைத்து 35 பவுன் நகையை துணிகரமாக கொள்ளை அடித்துச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
ஈரோடு,
ஈரோடு அருகே உள்ள திண்டல் அரவிந்தர் நகரை சேர்ந்தவர் பாக்கியராஜ் (வயது 34). வக்கீலான இவர் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார். இவருடைய மனைவி சரண்யா. இவர்களுக்கு அஷ்ரத் (8) என்ற மகன் உள்ளான். பாக்கியராஜின் தந்தை அவல்பூந்துறையில் வசித்து வருகிறார். அவருக்கு உடல்நிலை சரியில்லாததால் சரண்யா தன்னுடைய மகனுடன் அங்கு சென்று அவரை கவனித்து வருகிறார்.
பாக்கியராஜ் வாரத்துக்கு ஒருமுறை அவல்பூந்துறைக்கு சென்று தனது தந்தை மற்றும் மனைவி, மகனை பார்த்து வருவது வழக்கம். அதன்படி நேற்று முன்தினம் அவர் அவல்பூந்துறைக்கு சென்றுள்ளார்.
இந்த நிலையில் நேற்று காலை இவருடைய வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு வீடு திறந்து கிடந்தது. இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் இதுபற்றி பாக்கியராஜுக்கு தகவல் கொடுத்தனர். உடனே அவர் அவல்பூந்துறையில் இருந்து தன்னுடைய வீட்டுக்கு பதறியடித்துக்கொண்டு வந்தார்.
பின்னர் அவர் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது பொருட்கள் அங்கும், இங்குமாக சிதறிக்கிடந்தன. மேலும் பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 35 பவுன் நகைகளையும் காணவில்லை. அதை யாரோ மர்ம நபர்கள் கொள்ளை அடித்து சென்றது தெரியவந்தது.
இதுபற்றி அவர் ஈரோடு தாலுகா போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். இதுகுறித்து போலீசார் கூறும்போது, ‘பாக்கியராஜ் வெளியூர் சென்றதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் இரவு நேரத்தில் வீட்டின் பூட்டை உடைத்து நகைகளை கொள்ளை அடித்து சென்றுள்ளனர்’ என்றனர்.
மேலும் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்துக்கு வந்து அங்கு பதிவாகி இருந்த ரேகைகளை சேகரித்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். வக்கீல் வீட்டின் பூட்டை உடைத்து நகைகளை கொள்ளை அடித்துச்சென்ற சம்பவம் அந்த பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Tags :
Next Story