விருதுநகர் புல்லலக்கோட்டை ரோட்டில் டிரான்ஸ்பார்மர் பழுதால் மின் வினியோகம் பாதிப்பு


விருதுநகர் புல்லலக்கோட்டை ரோட்டில் டிரான்ஸ்பார்மர் பழுதால் மின் வினியோகம் பாதிப்பு
x
தினத்தந்தி 24 March 2018 3:00 AM IST (Updated: 24 March 2018 1:21 AM IST)
t-max-icont-min-icon

விருதுநகர் புல்லலக்கோட்டை ரோட்டில் டிரான்ஸ்பார்மர் பழுதால் மின் வினியோகம் பாதிக்கப்பட்டுள்ளதால் மின் வாரியம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

விருதுநகர்,

விருதுநகர் புல்லலக்கோட்டை ரோடு, இந்திரா நகர் பகுதியில் டிரான்ஸ்பார்மர்கள் திடீரென பழுதாகின. கடந்த காலங்களில் டிரான்ஸ்பார்மர்கள் பராமரிப்பு பணிகளை மின் வாரியமே மேற்கொண்டு வந்ததால் உடனடியாக பழுது நீக்க வாய்ப்பு ஏற்பட்டு வந்தது. ஆனால் தற்போது இந்த பணி ஒப்பந்த அடிப்படையில் விடப்பட்டுள்ளதால் உடனடியாக பழுது நீக்க வாய்ப்பு இல்லாமல் மின்வினியோகம் பாதிக்கப்படுகிறது.

விருதுநகர் புல்லலக்கோட்டை ரோடு, இந்திராநகர் பகுதியில் டிரான்ஸ்பார்மர்கள் பழுதாகிய நிலையில் அவைகளை பழுது நீக்க அதற்கான ஒப்பந்த நிறுவனம் எடுத்து சென்று விட்ட நிலையில் மின் வாரியம் அந்த பகுதியில் மின் வினியோகம் செய்வதற்கு அருகில் உள்ள வேறு டிரான்ஸ்பார்மர்களுக்கு இணைப்பு வழங்கி உள்ளது. இதனால் அந்த பகுதியில் சீரான மின்வினியோகம் இல்லாத நிலையில் தெருவிளக்குகளும் எரியாததால் மிகுந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

எனவே மின்வாரிய அதிகாரிகள் டிரான்ஸ்பார்மர் பழுதாகும் போது ஒப்பந்த நிறுவனம் மாற்று டிரான்ஸ்பார்மர்களை பொருத்தி விட்டு பழுதான டிரான்ஸ்பார்மர்களை எடுத்து செல்ல அறிவுறுத்த வேண்டும். எந்த வகையிலும் மின் வினியோகம் பாதிக்கப்படாததை மின் வாரியம் உறுதி செய்ய வேண்டும் என கோரப்பட்டுள்ளது. 

Next Story