இரும்பு கம்பிகள் வாங்கிக்கொண்டு ரூ.68½ லட்சம் மோசடி செய்த 17 பேர் மீது வழக்குப்பதிவு


இரும்பு கம்பிகள் வாங்கிக்கொண்டு ரூ.68½ லட்சம் மோசடி செய்த 17 பேர் மீது வழக்குப்பதிவு
x
தினத்தந்தி 24 March 2018 4:30 AM IST (Updated: 24 March 2018 1:34 AM IST)
t-max-icont-min-icon

இரும்பு கம்பிகள் வாங்கிக்கொண்டு ரூ.68½ லட்சம் மோசடி செய்த 17 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

திருச்சி,

திருச்சி பீமநகரை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவர் திருச்சியில் உள்ள ஒரு இரும்பு கம்பெனியில் விற்பனை மேலாளராக பணியாற்றி வருகிறார். இவர் திருச்சி குற்றப்பிரிவு போலீசில் ஒரு புகார் கொடுத்து உள்ளார். அதில் திருச்சியில் உள்ள 2 இரும்பு கம்பெனியின் பங்கு தாரர்கள் மற்றும் அலுவலர்கள் என 17 பேர் சேர்ந்து கடந்த 2017-ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை எங்கள் நிறுவனத்தில் இருந்து ரூ.68 லட்சத்து 52 ஆயிரத்து 155 மதிப்பில் இரும்பு கம்பிகள் வாங்கி சென்றனர்.

அதற்கான பணத்தை அவர்கள் செலுத்தவில்லை. பல முறை கேட்டு பார்த்தும் பணம் கொடுக்கவில்லை. எனவே இரும்பு கம்பிகள் பெற்றுக்கொண்டு ரூ.68 லட்சத்து 52 ஆயிரத்து 155 மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இந்த புகாரின் பேரில் போலீசார் 17 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story