சென்னை உள்பட 3 விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்
சென்னை உள்பட 3 விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த திருச்சி வாலிபர் கைது செய்யப்பட்டார்.
ஆலந்தூர்,
சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று முன்தினம் நள்ளிரவு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசிய மர்ம ஆசாமி, “சென்னை, திருச்சி, மதுரை ஆகிய விமான நிலையங்களில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது. இன்னும் சிறிது நேரத்தில் அது வெடிக்கும்” என்று கூறிவிட்டு இணைப்பை துண்டித்தார்.
இதையடுத்து சென்னை உள்பட 3 விமான நிலையங்களில் உள்ள மத்திய பாதுகாப்பு படையினர் உஷார்படுத்தப்பட்டனர். 3 விமான நிலையங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்தப்பட்டது. பாதுகாப்பு படையினர், வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய் உதவியுடன் சோதனையில் ஈடுபட்டனர். பயணிகள் வருகை மற்றும் புறப்படும் இடம், விமான நிலைய ஓடுபாதை உள்ளிட்ட பகுதிகளிலும் விடிய, விடிய சோதனை நடத்தப்பட்டது. தூத்துக்குடி, கோவை ஆகிய விமான நிலையங்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு, அங்கும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. ஆனால் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை.
இதற்கிடையில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்து போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த மர்ம ஆசாமியின் செல்போன் எண்ணை வைத்து போலீசார் விசாரணை நடத்தினர்.
அதில், திருச்சி மாவட்டம் லால்குடியை அடுத்த பூவாளூர் பகுதியில் இருந்து மிரட்டல் விடுத்து போனில் பேசி இருப்பது தெரியவந்தது. இது பற்றி லால்குடி போலீசாருக்கு தகவல் தரப்பட்டு, உடனடியாக வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவரை கைது செய்யுமாறு சென்னை மாநகர போலீசார் தெரிவித்தனர்.
அதன்பேரில் லால்குடி போலீசார், அங்கு விரைந்து சென்று வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சுப்பிரமணியனை (வயது 30) நேற்று கைது செய்தனர்.
போலீஸ் விசாரணையில், தாய் திட்டியதால் மனவேதனையில் மது அருந்தி விட்டு போதையில் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு பேசியதாக தெரிவித்தார். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஏற்கனவே 18-ந் தேதி இதேபோல் சென்னை விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த என்ஜினீயர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். விமான நிலையத்தில் வேலை வாங்கித்தருவதாக பணம் வாங்கி ஏமாற்றிய தனது நண்பரை பழிவாங்க அவரது செல்போனில் இருந்து மிரட்டல் விடுத்தது விசாரணையில் தெரிந்தது.
முன்னதாக 16-ந்தேதி ஆமதாபாத் விமான நிலையத்துக்கு வந்த வெடிகுண்டு மிரட்டலை தொடர்ந்து சென்னை விமான நிலையத்திலும் தீவிர பாதுகாப்பு போடப்பட்டது. வெடிகுண்டு மிரட்டல் சம்பவங்களால் சென்னை விமான நிலையத்தில் கடந்த ஒரு வாரத்தில் 3-வது முறையாக பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Tags :
Next Story