அதிவேகமாக வாகனங்களை இயக்கினால் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்படும், துணை போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை


அதிவேகமாக வாகனங்களை இயக்கினால் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்படும், துணை போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை
x
தினத்தந்தி 24 March 2018 3:00 AM IST (Updated: 24 March 2018 2:45 AM IST)
t-max-icont-min-icon

அதிவேகமாக வாகனங்களை இயக்கினால் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்படும் என்று போக்குவரத்து விழிப்புணர்வு முகாமில் துணை போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை விடுத்தார்.

உளுந்தூர்பேட்டை,

உளுந்தூர்பேட்டையில் போக்குவரத்து விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இன்ஸ்பெக்டர்கள் சாகுல்அமீது, கோவிந்தராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமுக்கு துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜேந்திரன் தலைமை தாங்கி பேசுகையில், உளுந்தூர்பேட்டை நகரில் ஓட்டுனர் உரிமம் இல்லாமலும், சீருடை அணியாமலும் டிரைவர்கள் ஆட்டோக்களை இயக்க கூடாது.

மேலும் அதிக கட்டணம் வசூலிக்க கூடாது. ஆட்டோக்களில் அளவுக்கு அதிகமாக பள்ளி குழந்தைகளை ஏற்றிச் செல்லக் கூடாது. சரக்கு வாகனங்களில் பொதுமக்களை ஏற்றி சென்றால் டிரைவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இதேபோல் இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிந்து வாகனங்களை இயக்க வேண்டும். கார் உள்ளிட்ட வாகனங்களில் வருபவர்கள் கட்டாயம் சீட் பெல்ட் அணிய வேண்டும். இல்லையெனில் அபராதம் விதிக்கப்படும். மோட்டார் சைக்கிளில் 2 பேருக்கு மேல் செல்லக் கூடாது. மேலும் போக்குவரத்து விதிமுறையை மீறி அதிவேகமாக வாகனங்களை இயக்கினால் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

இதில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் பாலமுரளி, மாணிக்கம், எழிலரசி, செல்வநாயகம், ஏழுமலை மற்றும் போலீசார், ஆட்டோ டிரைவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Next Story