வில்லியனூர் அருகே பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை, வடமாநில வாலிபர்கள் கைது
வில்லியனூர் அருகே பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த வடமாநில வாலிபர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து சுமார் ½ கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
வில்லியனூர்,
வில்லியனூர் அருகே பொறையூர் பகுதியில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு வடமாநில வாலிபர்களால் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து போலீஸ் சூப்பிரண்டு குணசேகரன் உத்தரவின் பேரில் வில்லியனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம், சப்-இன்ஸ்பெக்டர் வேலய்யன் மற்றும் போலீசார் பொறையூர் பகுதியில் சாதாரண உடையில் நேற்று முன்தினம் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது மறைமுகமான இடத்தில் இருந்த 2 வாலிபர்கள் மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்தனர். இதை கண்ட போலீசார், அந்த வாலிபர்களை சுற்றிவளைத்து பிடித்தனர். அவர்களிடம் இருந்து 10 கிராம் எடை கொண்ட 27 கஞ்சா பொட்டலங்கள் மற்றும் போதை புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
விசாரணையில் அந்த வாலிபர்கள் நாகாலாந்து மாநிலத்தை சேர்ந்த விடோகா டி சுமி (வயது 25), ஒடிசா மாநிலத்தை சேர்ந்த லிபக் ஸ்வய்ன் (32) என்பது தெரியவந்தது. இவர்கள் பொறையூரில் தனியார் பள்ளிஅருகே வாடகை வீட்டில் தங்கி இருந்து மேட்டுப்பாளையத்தில் உள்ள ஒரு தனியார் தொழிற்சாலையில் வேலை செய்துகொண்டே பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா மற்றும் போதை பொருட்களை விற்பனை செய்தது தெரியவந்தது.
அவர்கள் கூறிய தகவலின்படி வாடகை வீட்டில் இருந்து மேலும் 270 கிராம் கஞ்சா, புகையிலை பொருட்கள் மற்றும் ஒரு செல்போன் பறிமுதல் செய்யப்பட்டன.
இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்து புதுவை சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.

Related Tags :
Next Story