வீரசைவ மகாசபாவுக்கும், லிங்காயத்துக்கும் தொடர்பு இல்லை மந்திரி எம்.பி.பட்டீல் பேட்டி


வீரசைவ மகாசபாவுக்கும், லிங்காயத்துக்கும் தொடர்பு இல்லை மந்திரி எம்.பி.பட்டீல் பேட்டி
x
தினத்தந்தி 24 March 2018 4:45 AM IST (Updated: 24 March 2018 4:45 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடக மாநில நீர்ப்பாசனத்துறை மந்திரி எம்.பி.பட்டீல் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பெங்களூரு,

லிங்காயத் மகாசபாவை நாங்கள் தொடங்கியுள்ளோம். லிங்காயத் சமூகத்திற்கு தனி மத அங்கீகாரத்தை கர்நாடக அரசு வழங்கியுள்ளது. அதனால் நாங்கள் என்ன செய்தாலும் அதை வீரசைவ மகாசபாவிடம் கேட்டு செய்ய வேண்டிய அவசியம் இல்லை. நாங்கள் வீரசைவ பிரிவை சேர்ந்தவர்களாக இருந்தால் வீரசைவ மகாசபா சொல்வதை கேட்போம்.

வீரவைச மகாசபாவுக்கும், லிங்காயத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை. நாங்கள் லிங்காயத்துகள். லிங்காயத் மகாசபா தான் எங்களுக்கு தலைமை சங்கம் ஆகும்.

லிங்காயத் மகாசபா என்ன சொல்கிறதோ அதை தான் நாங்கள் கேட்போம். எங்களுக்கு என்று தனி வழி இருக்கும்போது நாங்கள் எதற்காக வேறு வழியில் செல்ல வேண்டும்?. இதுபற்றி அதிகம் விவாதிக்க வேண்டியது இல்லை.

இவ்வாறு மந்திரி எம்.பி.பட்டீல் கூறினார்.

Next Story