வருமான வரி சோதனைக்கு காங்கிரசார் பயப்படுவது ஏன்? ஜெகதீஷ் ஷெட்டர் கேள்வி
வருமான வரி சோதனைக்கு காங்கிரசார் பயப்படுவது ஏன்? என்று ஜெகதீஷ் ஷெட்டர் கேள்வி எழுப்பியுள்ளார்.
பெங்களூரு,
கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் ஜெகதீஷ் ஷெட்டர் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
வருமான வரி சோதனை விஷயத்தில் காங்கிரஸ் அரசியல் செய்கிறது. வருமான வரித்துறை சுதந்திரமாக செயல்படுகிறது. அது எந்த கட்சியின் வழிகாட்டுதலின்படியும் பணியாற்றுவது இல்லை. கிடைக்கிற தகவலின் அடிப்படையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்துகிறார்கள். காங்கிரஸ் தலைவர்கள் நேர்மையாக இருந்தால், வருமான வரி சோதனைக்கு பயப்படுவது ஏன்?. அறிவிக்கப்படாத சொத்துகள் அவர்களிடம் அதிகமாக இருப்பது வருமான வரித்துறைக்கு தெரியவந்துள்ளது.
வருமான வரி சோதனை மூலம் கருப்பு பணம் வெளியே வருகிறது. மாநிலத்தை காங்கிரசார் கொள்ளையடித்து உள்ளனர். அதனால் வருமான வரி சோதனையை கண்டு காங்கிரசார் பயப்படுகிறார்கள். லிங்காயத்துக்கு தனி மத அங்கீகாரம் வழங்கும் விஷயத்தில் அகில இந்திய வீரசைவ மகாசபா எடுக்கும் முடிவை பா.ஜனதா ஆதரிக்கும். தேர்தலில் ஆதாயம் பெறும் நோக்கத்தில் அந்த சமூகத்தை உடைக்கும் வேலையை இந்த அரசு செய்துள்ளது. காங்கிரசுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.
இவ்வாறு ஜெகதீஷ் ஷெட்டர் கூறினார்.
இதுதொடர்பாக பா.ஜனதாவை சேர்ந்த சி.டி.ரவி எம்.எல்.ஏ. கூறுகையில், “வருமான வரித்துறைக்கு எதிராக காங்கிரசார் போராட்டம் நடத்துகிறார்கள். அப்படி என்றால் வருமான வரித்துறையினர் தலீபான்களா?. நேர்மையாக இருப்பவர்களுக்கு வருமான வரித்துறையினர் எந்த தொந்தரவும் கொடுப்பது இல்லை. காங்கிரசார் நேர்மையாக இருந்தால் வருமான வரி சோதனையை கண்டு ஏன் பயப்பட வேண்டும்?. காங்கிரஸ் கட்சியினர் கருப்பு பணம் வைத்திருப்பார்கள். அதனால் தான் வருமான வரி சோதனைக்கு முன்பே காங்கிரசார் பயப்படுகிறார்கள்“ என்றார்.

Related Tags :
Next Story