நெல்லையில் வருங்கால வைப்பு நிதி குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 10–ந் தேதி நடக்கிறது


நெல்லையில் வருங்கால வைப்பு நிதி குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 10–ந் தேதி நடக்கிறது
x
தினத்தந்தி 25 March 2018 2:00 AM IST (Updated: 24 March 2018 6:47 PM IST)
t-max-icont-min-icon

வருங்கால வைப்பு நிதி குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 10–ந் தேதி நெல்லையில் நடைபெறுகிறது.

நெல்லை,

வருங்கால வைப்பு நிதி குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 10–ந் தேதி நெல்லையில் நடைபெறுகிறது.

இதுகுறித்து வருங்கால வைப்புநிதி நெல்லை மண்டல உதவி ஆணையாளர் ரமேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறிஇருப்பதாவது:–

குறைதீர்க்கும் கூட்டம்

நெல்லை தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தில் மண்டல ஆணையாளர் சனத் குமார் தலைமையில் ‘‘வருங்கால வைப்பு நிதி உங்கள் அருகில்’’ என்ற தலைப்பில் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறுகிறது. இதில் நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களை சேர்ந்த வருங்கால வைப்பு நிதி உறுப்பினர்கள் மற்றும் தொழில் அதிபர்களின் குறைகள் நீண்ட காலமாக தீர்க்கப்படாமல் இருந்தால் அது தொடர்பாக மனு அனுப்ப வேண்டும். மனுவின் மீது ‘‘வருங்கால வைப்பு நிதி உங்கள் அருகில்’’ என்று குறிப்பிட்டு, மனுதாரரின் செல்போன் எண் ஆகியவற்றை குறிப்பிட்டு, வருகிற 2–ந் தேதிக்குள் (திங்கட்கிழமை) கிடைக்கும் வகையில், மண்டல ஆணையாளர், வருங்கால வைப்பு நிதி நிறுவனம், என்.ஜி.ஓ. ‘பி’ காலனி, திருநெல்வேலி –7 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

10–ந் தேதி

அதை தொடர்ந்து வருகிற 10–ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 10.30 மணிக்கு வருங்கால வைப்பு நிதி உறுப்பினர்களுக்கும், பிற்பகல் 3 மணிக்கு தொழில் அதிபர்களுக்கும், மாலை 4 மணிக்கு வருங்கால வைப்பு நிதி விலக்கு அளிக்கப்பட்ட நிறுவனங்களுக்கும் குறைதீர்க்கும் கூட்டம் நடத்தப்படும். இதில் சம்பந்தப்பட்டவர்கள் மண்டல ஆணையாளர் சனத் குமாரை நேரில் சந்தித்து தங்களது குறைகளை நிவர்த்தி செய்து கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story