கோவில்பட்டியில் 2–வது குடிநீர் திட்டத்தை முதல்– அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 11–ந் தேதி தொடங்கி வைக்கிறார் அமைச்சர் கடம்பூர் ராஜூ தகவல்
கோவில்பட்டியில் நிறைவேற்றப்பட்ட 2–வது குடிநீர் திட்டத்தை முதல்– அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகிற 11–ந் தேதி (புதன்கிழமை) தொடங்கி வைக்கிறார் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.
கோவில்பட்டி,

புகைப்பட கண்காட்சி– மருத்துவ முகாம்
கோவில்பட்டியில் அ.தி.மு.க. அரசின் ஓராண்டு சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி மற்றும் இலவச மருத்துவ முகாம் நேற்று நடந்தது. அமைச்சர் கடம்பூர் ராஜூ தலைமை தாங்கி, புகைப்பட கண்காட்சியை திறந்து வைத்து பார்வையிட்டார். பின்னர் அவர், மருத்துவ முகாமையும் தொடங்கி வைத்தார். முகாமில் மருத்துவ குழுவினர் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து, மருந்து மாத்திரைகளை வழங்கினர்.
கோவில்பட்டி உதவி கலெக்டர் அனிதா, சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் போஸ்கோ ராஜா, நகரசபை ஆணையாளர் அச்சையா, தாசில்தார் ஜான்சன் தேவசகாயம், சுகாதார பணிகள் துணை இயக்குனரின் நேர்முக உதவியாளர் மாரிமுத்து, சுகாதார அதிகாரி ஸ்டாலின் குமார், சுகாதார ஆய்வாளர்கள் சுரேஷ், முருகன், ராஜா, அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் சி.த.செல்லப்பாண்டியன், நகர செயலாளர் விஜய பாண்டியன், ஒன்றிய செயலாளர் அய்யாத்துரை பாண்டியன், மாவட்ட விவசாய அணி இணை செயலாளர் ராமச்சந்திரன், எட்டயபுரம் நகர செயலாளர் ஆழ்வார் உதயகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இலவச நீர் மோர் பந்தல்
பின்னர் கோவில்பட்டி அண்ணா பஸ் நிலையம் முன்பு மாவட்ட ஜெயலலிதா பேரவை, நகர அ.தி.மு.க. சார்பில், இலவச நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டு திறப்பு விழா நடந்தது. அமைச்சர் கடம்பூர் ராஜூ இலவச நீர் மோர் பந்தலை திறந்து வைத்து, பொதுமக்களுக்கு குளிர்பானம், தர்பூசணி பழத்துண்டுகளை வழங்கினார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:–
2–வது குடிநீர் திட்டம்
கோவில்பட்டியில் நிறைவேற்றப்பட்ட 2–வது குடிநீர் திட்டத்தை கடந்த மாதம் 24–ந் தேதி முதல்– அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் தொடங்கி வைப்பதாக இருந்தது. ஆனால் அன்றைய தினம் பிரதமரின் தமிழகம் வருகையால், முதல்– அமைச்சரால் கோவில்பட்டிக்கு வர முடியவில்லை. எனவே கோவில்பட்டியில் நிறைவேற்றப்பட்ட 2–வது குடிநீர் திட்டத்தை வருகிற 11–ந் தேதி (புதன்கிழமை) முதல்– அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் வந்து தொடங்கி வைக்கிறார்.
கோவில்பட்டியில் ரூ.18 கோடி செலவில் அரசு செவிலியர் பயிற்சி கல்லூரி தொடங்க முதல்– அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். எனவே வரும் கல்வி ஆண்டில் இருந்து கோவில்பட்டியில் அரசு செவிலியர் பயிற்சி கல்லூரி தொடங்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
காவிரி மேலாண்மை வாரியம்
தமிழகத்தில் பா.ஜ.க. ஆட்சி அமைக்கும் என்று அக்கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறுவது வேடிக்கையாக உள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு முதல்– அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்– அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க இன்னும் 5 நாட்கள் உள்ளன. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, கடந்த 14 நாட்களாக பாராளுமன்றத்தை அ.தி.மு.க. எம்.பி.க்கள் முடக்கி வைத்துள்ளனர். நிச்சயமாக காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் நல்ல தீர்வு வரும். அதற்கான பணிகளை தமிழக அரசு செய்யும்.
முன்னாள் முதல்– அமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அ.தி.மு.க. நீடிக்காது என்று தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் போன்றோர்கள் கூறி வந்தனர். ஆனால் அவர்களின் கூற்றுகளை பொய்யாக்கி, அ.தி.மு.க. அரசு ஓராண்டு சாதனைகளை கொண்டாடி வருகிறது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் தொழிற்சாலை விரிவாக்கத்துக்கு எதிராக நடைபெறும் போராட்டம் குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் பேசி, அரசின் கவனத்துக்கு கொண்டு செல்வோம். தேர்தல்களை சந்திக்க அ.தி.மு.க. தயக்கம் காட்டியது கிடையாது. கூட்டுறவு சங்க தேர்தல், உள்ளாட்சி தேர்தலை சந்திக்க தயாராக உள்ளோம்.
இவ்வாறு அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.

Related Tags :
Next Story