கூடங்குளம் 2–வது அணுஉலையில் பராமரிப்பு பணிகள் முடிவடைந்து மே மாதம் மின்உற்பத்தி தொடங்கப்படும் வளாக இயக்குனர் டி.எஸ்.சவுத்ரி தகவல்
கூடங்குளம் 2–வது அணு உலையில் பராமரிப்பு பணிகள் முடிவடைந்து மே மாதம் 2–வது வாரத்தில் முழு அளவிலான மின்உற்பத்தி செய்யப்படும் என்று வளாக இயக்குனர் டி.எஸ்.சவுத்ரி கூறினார்.
வள்ளியூர்,

பேட்டி
நெல்லை மாவட்டம் வள்ளியூரில் உள்ள ஒரு கல்லூரி விழாவில் கூடங்குளம் அணுமின் நிலைய வளாக இயக்குனர் டி.எஸ்.சவுத்ரி கலந்து கொண்டார். அப்போது அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
கூடங்குளம் 2–வது அணு உலையில் பராமரிப்பு பணி மற்றும் எரிபொருள் நிரப்பும் பணி நடந்து வருகிறது. 300 நாட்களுக்கு மேல் இயங்கிய அணு உலைகள் பராமரிக்கப்படும். அதன்படி 2–வது அணு உலை தற்போது பராமரிக்கப்பட்டு வருகிறது. விரைவில் பணிகள் முடிந்து அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையத்தின் அனுமதி பெற்று மின்உற்பத்தி தொடங்கப்படும். பின்பு படிப்படியாக மின் உற்பத்தி அதிகரிக்கப்பட்டு முழு அளவிலான மின்உற்பத்தி வருகிற மே மாதம் 2–வது வாரத்தில் தொடங்கப்படும். 3, 4, 5 மற்றும் 6 ஆகிய அணு உலைக்கான பணிகள் நடைபெற்று வருகிறது.
50 சதவீதம் பணிகள்
இதுவரை 1 மற்றும் 2–வது அணு உலையில் இருந்து 27 ஆயிரம் மில்லியன் யூனிட் மின் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படுகிறது.
உள்ளூர் மக்களுக்கு திறமை மற்றும் தகுதி அடிப்படையில் 50 சதவீதம் பணிகள் வழங்குவது குறித்து பரிசீலனை செய்து வருகிறோம். தொழில்நுட்ப பணிகளுக்கு மட்டும் வெளியூரை சேர்ந்தவர்கள் வேலை பார்க்கின்றனர். அடுத்து தொடங்கும் அணு உலை பணிகளிலும் உள்ளூர் மக்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படும்.
இவ்வாறு வளாக இயக்குனர் டி.எஸ்.சவுத்ரி கூறினார்.

Related Tags :
Next Story