ஸ்ரீவைகுண்டம் அருகே சட்டசேவை முகாமில் 605 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் மாவட்ட முதன்மை நீதிபதி சாருஹாசினி வழங்கினார்
ஸ்ரீவைகுண்டம் அருகே சட்டசேவை முகாமில் 605 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட முதன்மை நீதிபதி சாருஹாசினி வழங்கினார்.
ஸ்ரீவைகுண்டம்,
ஸ்ரீவைகுண்டம் அருகே சட்டசேவை முகாமில் 605 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட முதன்மை நீதிபதி சாருஹாசினி வழங்கினார்.
சட்டசேவை முகாம்
ஸ்ரீவைகுண்டம் அருகே கருங்குளத்தில் மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு, வட்டசட்ட பணிகள் குழு, அரசு துறைகள் சார்பில், புதிய வடிவிலான சட்டசேவை முகாம் நேற்று நடந்தது. மாவட்ட முதன்மை நீதிபதியும், மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு தலைவருமான சாருஹாசினி தலைமை தாங்கி பேசினார். பின்னர் அவர், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
தூத்துக்குடி சப்–கோர்ட்டு நீதிபதியும், மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு செயலாளருமான சாமுவேல் பெஞ்சமின், ஸ்ரீவைகுண்டம் உரிமையியல் நீதிபதி ஆஷா கவுசல்யா சாந்தினி, ஸ்ரீவைகுண்டம் குற்றவியல் நீதித்துறை நடுவர் முருகன், மாவட்ட வருவாய் அலுவலர் வீரப்பன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேந்திரன், ஸ்ரீவைகுண்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு சகாய ஜோஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நலத்திட்ட உதவிகள்
முகாமில் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் சட்ட கல்லூரி மாணவர்களுக்கு ரூ.50 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்பட்டது. வருவாய் துறை சார்பில் 10 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா, 110 பேருக்கு உழவர் பாதுகாப்பு அட்டை, 3 பேருக்கு முதியோர் உதவித்தொகை வழங்கப்பட்டது. மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் 10 பேருக்கு உதவித்தொகை, வேளாண்மை துறை சார்பில் 3 பேருக்கு சோலார் மின்விளக்கு வழங்கப்பட்டது.
தொழிலாளர் நலத்துறை சார்பில் 348 பேருக்கு நலவாரிய அடையாள அட்டை, 16 பேருக்கு இறப்பு நிவாரண உதவித்தொகை ரூ.2 லட்சத்து 75 ஆயிரம், 10 பேருக்கு திருமண உதவித்தொகை, ஒருவருக்கு விபத்து நிவாரண தொகை ரூ.1 லட்சத்து 2 ஆயிரம் வழங்கப்பட்டது. மகளிர் மேம்பாடு வறுமை ஒழிப்பு திட்டத்தில் 20 பேருக்கு ரூ.2 லட்சத்து 800 உதவித்தொகை வழங்கப்பட்டது.
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி சார்பில் 40 வணிகர்களுக்கு முத்ரா கடன், 2 பேருக்கு ஆட்டோ கடன், ஒருவருக்கு கல்விக்கடன் என மொத்தம் 43 பேருக்கு ரூ.45 லட்சத்து 49 ஆயிரம் கடன் உதவி வழங்கப்பட்டது. முகாமில் மொத்தம் 17 அரசு துறைகள் சார்பில் 605 பயனாளிகளுக்கு ரூ.52 லட்சத்து 83 ஆயிரம் மதிப்பிலான உதவித்தொகை வழங்கப்பட்டது. கிராம உதயம் சார்பில் 1,000 பேருக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.
கலந்து கொண்டவர்கள்
ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் தாமஸ் பயஸ் அருள், கிராம உதயம் இயக்குனர் சுந்தரேசன், மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் கீதாராணி, கருங்குளம் யூனியன் ஆணையாளர்கள் கிரி, வசந்தா, மாவட்ட வேளாண்மை துறை அதிகாரி விஜயா, வக்கீல் சங்க தலைவர் பெருமாள் பிரபு, செயலாளர் சங்கரலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story