விருதுநகரில் ஜாக்டோ-ஜியோ சார்பில் ஊர்வலம்


விருதுநகரில் ஜாக்டோ-ஜியோ சார்பில் ஊர்வலம்
x
தினத்தந்தி 25 March 2018 3:45 AM IST (Updated: 25 March 2018 1:00 AM IST)
t-max-icont-min-icon

ஜாக்டோ-ஜியோ சார்பில் விருதுநகரில் ஊர்வலம் நடந்தது.

விருதுநகர்,

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான அமைப்பான ஜாக்டோ-ஜியோ கீழ்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளனர். புதிய பங்களிப்பு ஓய்வூதியதிட்டத்தினை ரத்து செய்து மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தினை அமல் படுத்த வேண்டும். 110 விதியின் கீழ் அமைக்கப்பட்ட வல்லுனர் குழுவின் அறிக்கையை உடனடியாக சமர்ப்பிக்க வேண்டும்.

இடைநிலை ஆசிரியர்கள், முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைத்து ஆசிரியர்கள் மற்றும் அமைச்சுப்பணியாளர்கள், கண்காணிப்பாளர்கள், தொழில்நுட்ப ஊழியர்கள், ஊர்தி ஓட்டுனர்கள் உள்ளிட்ட அனைத்து அரசு ஊழியர்களின் ஊதிய முரண்பாடுகளை களைந்து மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்கிட வேண்டும். கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் பல்கலைக்கழக ஆசிரியர்களுக்கு 7-வது ஊதியக்குழுவின் பரிந்துரையை உடனடியாக அமல்படுத்த வேண்டும்.

சத்துணவு, அங்கன்வாடி, கிராமஉதவியாளர், ஊராட்சி மன்ற செயலாளர்கள், ஊர்புற நூலகர், பகுதி நேர சிறப்பு ஆசிரியர்கள் ஆகியோருக்கு காலமுறை ஊதியம் வழங்குவதோடு ஏற்கனவே தொகுப்பூதியத்தில் பணியாற்றி தற்போது காலமுறை ஊதியத்தில் பணியாற்றி வரும் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் தொகுப்பூதியத்தில் பணியாற்றிய காலத்தை நியமன நாள் முதல் பணிவரன் முறை செய்திட வேண்டும். 21 மாத ஊதியக்குழு நிலுவை தொகையினை உடனே வழங்க வேண்டியது அவசியமாகும்.

மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் நேற்று விருதுநகர் எம்.ஜி.ஆர்.சிலை அருகில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு மின்வாரிய அலுவலகம் வந்தடைந்தனர். ஆரம்பபள்ளிஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் வைரமுத்து, அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் கண்ணன், வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்ட செயலாளர் கண்ணன், முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட செயலாளர் பாபுபிரேம்குமார் ஆகியோர் தலைமை வகித்தனர். முடிவில் நடைபெற்ற கூட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தை சேர்ந்த சுரேஷ், ஆய்வக ஓட்டுனர் சங்கத்தை சேர்ந்த செல்வகுமார் ஆகியோர் பேசினர். 

Next Story