திருட்டுத்தனமாக மது விற்ற 6 பேர் கைது
கும்மிடிப்பூண்டி அருகே திருட்டுத்தனமாக மது விற்ற 6 பேர் கைது செய்யப்பட்டனர். போலீசார் அவர்களை கைது செய்து அவர்களிடம் இருந்து மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
கும்மிடிப்பூண்டி,
கும்மிடிப்பூண்டி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு சப்–இன்ஸ்பெக்டர் வரதராசன் தலைமையில் போலீசார் ஆரம்பாக்கம் அடுத்த அரும்பாக்கம் சோதனைச்சாவடியில் சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக நடந்து வந்த 3 பேரை சந்தேகத்தின் பேரில் போலீசார் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.
போலீஸ் விசாரணையில் அவர்கள், கும்மிடிப்பூண்டி அடுத்த வழுதிலம்பேடு கிராமத்தை சேர்ந்த மணி (வயது 52) என்பதும், மாதர்பாக்கம் என்.எஸ். நகரை சேர்ந்த ரத்தினம் (56) என்பதும், மன்னார்குடியை சேர்ந்த அரிஷ்(35) என்பதும் தெரிய வந்தது. இதில் மணி வைத்திருந்த துணிப்பையில் 32 மது பாட்டில்களும், ரத்தினம் வைத்திருந்த துணிப்பையில் 30 மது பாட்டில்களும், அரிஷ் வைத்திருந்த துணிப்பையில் 35 மதுபாட்டில்கள் இருப்பது தெரிய வந்தது. மேற்கண்ட தமிழ்நாட்டு வகை மதுபாட்டில்களை அந்த பகுதியில் சாலையோரம் நிற்கும் லாரி டிரைவர்களுக்கு அவர்கள் திருட்டுத்தனமாக விற்பனை செய்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. போலீசார் அவர்களை கைது செய்து அவர்களிடம் இருந்து மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
அதே போல கும்மிடிப்பூண்டி அடுத்த தேர்வழி கிராமத்தில் உள்ள டாஸ்மாக் கடை அருகே போலீசார் நடத்திய சோதனையில் அந்த பகுதியில் திருட்டுதனமாக மது பாட்டில்களை விற்பனை செய்து கொண்டிருந்த மங்காவரத்தை சேர்ந்த மாரியை (44) மடக்கி பிடித்து கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து 34 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
மேலும், கவரைப்பேட்டை ரெயில் நிலையம் அருகே திருட்டுத்தனமாக மதுபாட்டில் விற்பனையில் ஈடுபட்ட பொன்னேரியை அடுத்த திருப்பேடு கிராமத்தை சேர்ந்த ஜானகிராமன்(49) என்பவரை கைது செய்து அவரிடம் இருந்து 36 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். கும்மிடிப்பூண்டி ரெயில்நிலையம் அருகே திருட்டுத்தனமாக மது விற்ற அப்பாவரத்தை சேர்ந்த அய்யப்பன்(36) என்பவரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து 35 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Related Tags :
Next Story