ரூ.14½ லட்சத்தில் கட்டப்பட்ட கிராம சேவை மைய கட்டிடம்


ரூ.14½ லட்சத்தில் கட்டப்பட்ட கிராம சேவை மைய கட்டிடம்
x
தினத்தந்தி 25 March 2018 4:15 AM IST (Updated: 25 March 2018 1:11 AM IST)
t-max-icont-min-icon

பேரம்பாக்கத்தில் ரூ.14½ லட்சத்தில் கட்டப்பட்ட கிராம சேவை மைய கட்டிடத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவள்ளூர்,

திருவள்ளூர் மாவட்டம் பேரம்பாக்கம் முதல்நிலை ஊராட்சியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில்  தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் 2014–15–ன் கீழ் ரூ.14 லட்சத்து 55 ஆயிரம் மதிப்பில் புதிய கிராம சேவை மைய கட்டிடம் கட்டப்பட்டது. இந்த கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு  3 ஆண்டுகள் ஆன பின்னரும் இதுவரை மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைக்காமல் பூட்டி உள்ளது. இந்த கிராம சேவை மைய கட்டிடத்தை பொதுமக்கள் பயன்படுத்த முடியாமல் வீணாக உள்ளது.

எனவே இந்த கிராம சேவை மைய கட்டிடத்தை அதிகாரிகள் இனிமேலும் காலதாமதம் செய்யாமல் உடனடியாக திறந்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என பேரம்பாக்கம் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story