விருத்தாசலம் அருகே வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை


விருத்தாசலம் அருகே வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 25 March 2018 3:30 AM IST (Updated: 25 March 2018 1:36 AM IST)
t-max-icont-min-icon

விருத்தாசலம் அருகே வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பெண்ணாடம்,

விருத்தாசலம் அருகே உள்ள கவனை கிராமத்தை சேர்ந்தவர் குமரேசன் மகன் செந்தில்(வயது 32). இவரது மனைவி கனகா(27). வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த செந்தில், கடந்த சில நாட்களுக்கு முன்பு சொந்த ஊர் திரும்பினார்.

இந்த நிலையில் சம்பவத்தன்று செந்தில் வீட்டில் உள்ள ஒரு அறையில் தூக்குப்போட்டு கொண்டார். இதை பார்த்த உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் செந்திலை மீட்டு சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி செந்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அவரது மனைவி கனகா மங்கலம்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து செந்தில் உடல்நலக்கோளாறு காரணமாக தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story