நாமக்கல்லில் ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினர் ஊர்வலம்
5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பின் சார்பில் நாமக்கல்லில் ஊர்வலம் நடந்தது.
நாமக்கல்,
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், இடைநிலை மற்றும் முதுநிலை ஆசிரியர்களின் ஊதியக்குழு முரண்பாடுகளை தீர்க்க வேண்டும், தொகுப்பூதியத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், ஊதியக்குழு அறிவிப்பில் மறுக்கப்பட்ட 21 மாத கால நிலுவை தொகையை வழங்க வேண்டும், சிறப்பு காலமுறை ஊதியம் பெறும் சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள் உள்பட அனைவருக்கும் வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், கல்லூரி மற்றும் பல்கலைக்கழக ஆசிரியர்களுக்கு 7-வது ஊதியக்குழுவின் ஊதிய விகிதங்கள் அமல்படுத்தப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ அமைப்பின் சார்பில் தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் ஊர்வலம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
ஆர்ப்பாட்டம்
நாமக்கல்லில் முதன்மை கல்வி அலுவலகம் அருகே தொடங்கிய இந்த ஊர்வலம் மோகனூர் சாலை, சந்தைபேட்டைபுதூர், கோட்டை சாலை வழியாக பூங்காசாலையை வந்தடைந்தது. இந்த ஊர்வலத்துக்கு ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர் ராஜேந்திர பிரசாத் தலைமை தாங்கினார். பாலகிருஷ்ணன் வரவேற்று பேசினார். தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாநில பொதுச்செயலாளர் செல்வராஜு முன்னிலை வகித்தார். தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநில பொதுச்செயலாளர் கோவிந்தன் ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். இதில் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட தலைவர் பழனியப்பன், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் செயலாளர் முருக.செல்வராசன், நேரடி நியமனம் பெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் சங்க மாவட்ட தலைவர் ரமேஷ், செயலாளர் நல்லகுமார் உள்பட பல்வேறு சங்கங்களின் நிர்வாகிகள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் திரளாக கலந்து கொண்டனர். இவர்கள் கோரிக்கை அட்டைகளை ஏந்தியவாறு சென்றனர்.
பின்னர் பூங்கா சாலையில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் கல்வித்துறை பணியாளர் சங்கத்தின் மாநில தலைவர் பொன்.ஜெயராம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். முடிவில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செல்வக்குமார் நன்றி கூறினார்.

Related Tags :
Next Story