திருமணம் ஆன 4 மாதத்தில் புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை உதவி கலெக்டர் விசாரணை
தேன்கனிக்கோட்டை அருகே திருமணம் ஆன 4 மாதத்தில் புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.
தேன்கனிக்கோட்டை,
தேன்கனிக்கோட்டை அருகே உள்ள சம்மந்தகோட்டை கிராமத்தை சேர்ந்தவர் சசிகுமார். விவசாயி. அதே பகுதியை சேர்ந்தவர் பவானி (வயது 19). இவர்கள் இருவருக்கும் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. சம்பவத்தன்று பவானி, கணவர் சசிகுமாருடன், தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு சென்ற போது பவானி காதில் அணிந்திருந்த தங்க கம்மல் ஒன்று தொலைந்து விட்டதாக தெரிகிறது.
இதனால் அவருடைய தாயார், பவானியை திட்டியதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக மனமுடைந்த பவானி, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த தேன்கனிக்கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
உதவி கலெக்டர் விசாரணை
பின்னர் அவர்கள் பவானியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணம் ஆகி 4 மாதங்களுக்குள் அவர் உயிரிழந்துள்ளதால் இது தொடர்பாக ஓசூர் உதவி கலெக்டர் சந்திரகலா விசாரணை நடத்தி வருகிறார்.

Related Tags :
Next Story