எம்.எல்.ஏ.பதவியை ராஜினாமா செய்த 7 பேருக்கும் காங்கிரஸ் சார்பில் தேர்தலில் போட்டியிட ‘சீட்’ வழங்குவது உறுதி


எம்.எல்.ஏ.பதவியை ராஜினாமா செய்த 7 பேருக்கும் காங்கிரஸ் சார்பில் தேர்தலில் போட்டியிட ‘சீட்’ வழங்குவது உறுதி
x
தினத்தந்தி 25 March 2018 4:43 AM IST (Updated: 25 March 2018 4:43 AM IST)
t-max-icont-min-icon

எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்த 7 பேருக்கும் காங்கிரஸ் சார்பில் தேர்தலில் போட்டியிட ‘சீட்‘ வழங்குவது உறுதி என்று ஜமீர் அகமதுகான் தெரிவித்தார்.

பெங்களூரு,

எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்த 7 பேருக்கும் காங்கிரஸ் சார்பில் தேர்தலில் போட்டியிட ‘சீட்‘ வழங்குவது உறுதி என்று ஜமீர் அகமதுகான் தெரிவித்தார்.

கடந்த டெல்லி மேல்-சபை தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக ஜனதாதளம் (எஸ்) கட்சியை சேர்ந்த ஜமீர் அகமதுகான், அகண்ட சீனிவாச மூர்த்தி, செலுவராயசாமி உள்பட 7 பேர் ஓட்டுப்போட்டனர். இந்த விவகாரத்தை தொடர்ந்து அவர்கள் கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டனர். இதனால் அவர்கள் 7 பேரும் அக்கட்சி மீது அதிருப்தியில் இருந்து வந்தனர்.

இந்த நிலையில் ஜனதாதளம்(எஸ்) அதிருப்தி எம்.எல்.ஏ.க்களாக இருந்த ஜமீர்அகமது கான் உள்பட 7 பேரும் தங்களது பதவியை ராஜினாமா செய்து உள்ளனர். இதுபற்றி ஜமீர்அகமது கான் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

டெல்லி மேல்-சபைக்கு நடந்த தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக ஓட்டுப்போட்டதாக நான் உள்பட 7 பேர் ஜனதாதளம்(எஸ்) கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டோம். தற்போது நாங்கள் 7 பேரும் தங்களது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துள்ளோம். அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி முன்னிலையில் 7 பேரும் காங்கிரசில் சேர உள்ளோம். எங்கள் 7 பேருக்கும் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட ‘சீட்‘ வழங்கப்படும் என்று முதல்-மந்திரி சித்தராமையா, மாநில தலைவர் பரமேஸ்வர் தெரிவித்துள்ளனர். காங்கிரஸ் கட்சி கொடுத்த வாக்கை காப்பாற்ற கூடியது. அதனால் எங்கள் 7 பேருக்கும் காங்கிரஸ் சார்பில் தேர்தலில் போட்டியிட ‘சீட்‘ வழங்குவது உறுதி.

சாம்ராஜ்பேட்டை தொகுதியில் என்னை எதிர்த்து ஜனதாதளம்(எஸ்) சார்பில் முஸ்லிம் வேட்பாளரை நிறுத்த தேவேகவுடாவும், குமாரசாமியும் முடிவு செய்து உள்ளனர். என்னை எதிர்த்து முன்னாள் முதல்-மந்திரி பாரூக் அப்துல்லாவை நிறுத்தினால் கூட வெற்று பெறுவேன். நான் தேர்தலில் தோல்வி அடைந்தால், எனது தலையை நானே வெட்டிக்கொள்வேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story