ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கு : பீட்டர் முகர்ஜியை டெல்லிக்கு அழைத்து சென்று விசாரிக்கலாம்


ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கு : பீட்டர் முகர்ஜியை டெல்லிக்கு அழைத்து சென்று விசாரிக்கலாம்
x
தினத்தந்தி 25 March 2018 5:09 AM IST (Updated: 25 March 2018 5:09 AM IST)
t-max-icont-min-icon

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கு தொடர்பாக பீட்டர் முகர்ஜியை டெல்லிக்கு அழைத்து சென்று விசாரிக்க சி.பி.ஐ. கோர்ட்டு அனுமதி வழங்கி உள்ளது.

மும்பை,

ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனத்தின் இயக்குனர்களாக இருந்தவர்கள் பீட்டர் முகர்ஜி மற்றும் அவரது மனைவி இந்திராணி முகர்ஜி. தற்போது 2 பேரும் ஷீனா போரா கொலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு மும்பை ஜெயிலில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

இவர்கள் தங்கள் நிறுவனம் வெளிநாட்டில் இருந்து சட்டவிரோதமாக முதலீட்டை பெற முன்னாள் நிதிமந்திரி சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்திற்கு லஞ்சம் கொடுத்ததாக சி.பி.ஐ.க்கு வாக்கு மூலம் அளித்து இருந்தனர். இதையடுத்து கடந்த மாதம் கார்த்தி சிதம்பரம் கைது செய்யப்பட்டார்.

சமீபத்தில் கார்த்தி சிதம்பரத்தை மும்பை அழைத்து வந்த சி.பி.ஐ. அதிகாரிகள் பைகுல்லா ஜெயிலில் அடைக்கப்பட்ட இந்திராணி முகர்ஜி முன்னிலையில் வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தினர். இந்தநிலையில் ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கு தொடர்பாக பீட்டர் முகர்ஜியை டெல்லி அழைத்து சென்று விசாரணை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று மும்பை சி.பி.ஐ. கோர்ட்டில் சி.பி.ஐ. தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதி, பீட்டர் முகர்ஜியை டெல்லி அழைத்து சென்று விசாரணை நடத்த அனுமதி அளித்தார். நாளை(திங்கட்கிழமை) முதல் ஏப்ரல் 3-ந் தேதி வரை பீட்டர் முகர்ஜியிடம் விசாரணை நடத்த சி.பி.ஐ.க்கு கோர்ட்டு அனுமதி அளித்துள்ளது. 

Next Story