காவல் படையில் முதலிடம்


காவல் படையில் முதலிடம்
x
தினத்தந்தி 25 March 2018 12:30 PM IST (Updated: 25 March 2018 12:30 PM IST)
t-max-icont-min-icon

இந்திய - திபெத் எல்லை பாதுகாப்பு படையில் ராணுவ அதிகாரி அந்தஸ்து பெற்ற முதல் பெண் என்ற பெருமையை பெற்றுள்ளார், பிரக்ரிதி.

ந்திய - திபெத் எல்லை பாதுகாப்பு படையில் ராணுவ அதிகாரி அந்தஸ்து பெற்ற முதல் பெண் என்ற பெருமையை பெற்றுள்ளார், பிரக்ரிதி. 25 வயதான இவர் பீகார் மாநிலம் சமஸ்திபூர் மாவட்டத்தை சேர்ந்தவர். நாட்டுக்கு சேவை செய்ய வேண்டும் என்பது தனது சிறு வயது விருப்பமாக இருந்தது என்கிறார், பிரக்ரிதி. இவருடைய தந்தை விமானப்படை அதிகாரி. அவரை பார்த்து ராணுவத்தில் சேர வேண்டும் என்ற உத்வேகத்தை வளர்த்துகொண்டதாக கூறுகிறார்.

பிரக்ரிதி எலக்ட்ரிக்கல் என்ஜினீயரிங் படித்தவர். 2016-ம் ஆண்டு மத்திய அரசு இந்திய-திபெத் எல்லை பாதுகாப்பு போலீஸ் படையில் ராணுவ அந்தஸ்து கொண்ட பெண் அதிகாரியை தேர்வு செய்யும் அறிவிப்பை வெளியிட்டது. அதை பார்த்த பிரக்ரிதி மத்திய ஆயுத போலீஸ் படை நடத்திய தேர்வுக்கு விண்ணப்பித்தார். போட்டித்தேர்வுக்காக இரவு-பகல் பாராமல் படித்தார். அவருடைய கடின உழைப்புக்கு முதல் முயற்சியிலேயே பலன் கிடைத்துவிட்டது. இந்திய- திபெத் எல்லை பாதுகாப்பு போலீஸ் படையின் உயரிய பதவிக்கு தேர்வு செய்யப் பட்டுவிட்டார். இந்த பாதுகாப்பு படையில் தொழில் நுட்ப பிரிவு, டாக்டர் போன்ற பதவி களில்தான் இதுவரை பெண்கள் இடம்பிடித்திருக்கிறார்கள்.

‘‘நான் இந்த உயர்ந்த நிலையை எட்டுவதற்கு பெற்றோர் கொடுத்த ஊக்கமே முதல் காரணம். என்னுடைய விருப்பப்படி நடந்துகொள்ள அவர்கள் முழு சுதந்திரம் கொடுத்தார்கள். எல்லா பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகளிடம் ஆண், பெண் என்ற பேதம் பார்க்காமல் அவர்கள் விரும்பும் துறையில் சேர அனுமதிக்க வேண்டும்’’ என்று வேண்டுகோள் விடுக்கிறார், பிரக்ரிதி.

இந்திய - திபெத் எல்லை பாதுகாப்புபோலீஸ் படையில் 83 ஆயிரம் போலீசார் பணியாற்றுகிறார்கள். எனினும் பெண் போலீசார் 1500 பேர்தான் இடம்பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story