எழுத்தாளரான வேலைக்காரப் பெண்
பேபி ஹால்தருக்கு 12 வயதிலே திருமணம் செய்துவைத்துவிட்டார்கள்.13 வயதிலே தாய்மையடைந்தார். அடுத்தடுத்து தாய்மையடைந்து மூன்று குழந்தைகளுக்கு தாயானார்.
பேபி ஹால்தருக்கு 12 வயதிலே திருமணம் செய்துவைத்துவிட்டார்கள்.13 வயதிலே தாய்மையடைந்தார். அடுத்தடுத்து தாய்மையடைந்து மூன்று குழந்தைகளுக்கு தாயானார். தந்தை மற்றும் கணவரின் பொறுப்பற்ற செயல்பாடுகளால் பேபி ஹால்தரின் வாழ்க்கையே கேள்விக்குறியானது.
ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த அவர் குழந்தைகளை வளர்க்க வழியின்றி, வசதிபடைத்தவர்களின் வீடுகளுக்கு வேலைக்கு சென்றார். அங்கு தனக்கு கிடைத்த கசப்பான அனுபவங்களை எல்லாம் மூலதனமாக்கி எழுத்தாளர் அவதாரம் எடுத்துவிட்டார். எதிர்கொண்ட துயரங்கள், வெளிப்படுத்த இயலாமல் மனதுக்குள் பூட்டிவைத்திருந்த வேதனைகளை எழுத்துக்களாகவடித்தார்.அதுஅவரதுசுயசரிதையாக ‘ஆலோ அந்தாரி’ என்ற பெயரில் இந்தியில் முதலில் வெளியானது.
பேபி ஹால்தரின் துயர வாழ்க்கை அடங்கிய அந்த புத்தகம் ஏற்படுத்திய அதிர்வலை உலக மொழிகளையும் வசப்படுத்திவிட்டது. இவருடைய சுயசரிதை பிரெஞ்சு, ஜெர்மன், ஜப்பான் உள்பட 13 வெளிநாட்டு மொழிகளிலும், 8 இந்திய மொழிகளிலும் வெளியாகி இருக்கிறது. அதற்கு கிடைத்த வரவேற்பு பேபி ஹால்தரை எழுத்தாளராக தொடர்ந்து இயங்க வைத்துக்கொண்டிருக்கிறது. அவர், பெண்மையின் உணர்வுகளை பிரதிபலிக்கும் விதத்தில், தன் வாழ்க்கையில் நடந்த யதார்த்தங்களை புத்தகங்களாக வெளிக்கொண்டு வருகிறார்.
வீட்டு வேலை செய்பவராக இருந்த பேபி ஹால்தரை எழுத்தாளராக உயர்த்தியவர் பிரபோத் குமார். இவர் பிரபல வங்காள எழுத்தாளரான பிரேம்சந்தின் பேரன். பேராசிரியரான இவருடைய வீட்டுக்கு வேலைக்கு சென்றபின்னர்தான் பேபி ஹால்தரின் வாழ்க்கையில் திருப்புமுனை ஏற்பட்டிருக்கிறது.
பேபி சிறுமியாக இருக்கும்போதே தந்தை வீட்டைவிட்டு வெளியேறிவிட்டார். அதன் பிறகு குடும்ப செலவுகளை சமாளிக்க தாயார் சிரமரப்பட்டதால் 7-ம் வகுப்புடன் பேபியின் பள்ளிப்படிப்பு முடிவுக்கு வந்துவிட்டது. 12 வயதில் தன்னைவிட இருமடங்கு வயது முதிர்ந்தவரை திருமணம் செய்துகொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானார். மண வாழ்க்கை மகிழ்ச்சியாக நகரவில்லை. கொடுமைக்கார கணவனிடம் இருந்து மீள்வதற்கு வழி தெரியாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடந்து மூன்று குழந்தைகளுக்கு தாயாகி இருக்கிறார்.
கணவரின் தொல்லைகள் நாளுக்கு நாள் அதிகரிக்கவே குழந்தைகளுடன் வீட்டைவிட்டு வெளியேறி இருக்கிறார். என்ன வேலை செய்து குழந்தைகளை காப்பாற்றுவது என்று தடுமாறியவருக்கு வீட்டுவேலை வாழ்வாதாரம் கொடுத்திருக்கிறது. பிரபோத்குமாரின் வீட்டில் வேலை பார்த்தபொழுது அங்கிருந்த நூலகத்தை சுத்தம் செய்யும் பணியை மேற்கொண்டிருக்கிறார். அப்போது புத்தகங்களை எடுத்து ஆவலாக புரட்டி பார்த்ததை பிரபோத் கவனித்திருக்கிறார். அவர்தான் பேபியை புத்தகங்கள் வாசிக்கவும், எழுதவும் தூண்டியிருக்கிறார்.
பேபி தன்னுடைய வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை வங்காள மொழியில் எழுத தொடங்கி இருக்கிறார். அதனை பிரபோத் இந்தியில் மொழி பெயர்த்து புத்தகமாக வெளியிட, பேபி உலகறிந்த எழுத்தாளராக மாறிவிட்டார். பெண்கள் ஆண்களால் எப்படி நிராயுதபாணியாக்கப்படுகிறார்கள் என்பதை உணர்வுப்பூர்வமாக பதிவு செய்தது பெண்கள் மட்டுமல்ல ஆண்கள் மத்தியிலும் தாக்கத்தை ஏற்படுத்தி விட்டது.
பேபியின் புத்தகங்களுக்கு பாரீசில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அங்கு மட்டும் 6 லட்சம் புத்தகங்கள் விற்றுள்ளதாகவும், அதன் மூலம் தனக்கு நல்ல வருமானம் கிடைத்ததாகவும் சொல்கிறார். வீட்டுவேலையில் இருந்து விடுபட்டு முழுநேர எழுத்தாளராகி இருக்கும் பேபி, கொல்கத்தாவில் சொந்த வீடும் வாங்கிவிட்டார். எழுத்து பணிக்கு மத்தியில் தொண்டு நிறுவனம் ஒன்றில் சேர்ந்து சமூக சேவையிலும் தன்னை இணைத்துள்ளார்.
‘‘எவ்வளவோ கஷ்டங்களில் இருந்து மீண்டு வந்திருப்பதை நினைத்து பார்த்தால் பெருமிதமாக இருக்கிறது. என் வாழ்க்கை பயனுள்ளதாகியிருக்கிறது. என்னால் பிறருக்கு இயன்ற உதவிகளை செய்ய முடியும் என்று நம்புகிறேன். அதனால் தொண்டு நிறுவனத்தில் இணைந்துள்ளேன். அடுத்து நான்கு புத்தகங்கள் எழுதுவதற்கான வரைவு கிட்டத்தட்ட தயாராக இருக்கிறது. உலகம் மாறும், மனநிலையும் மாறும். இதேபோன்ற சூழ்நிலைகளில் பெண்கள் யாரையும் சார்ந்து இருக்கக்கூடாது என்பது என்னுடைய எண்ணம். பெண்களிடம் தன் வாழ்க்கை சார்ந்த சுயநலமும் இருக்க வேண்டும். `நான் எனக்கு முக்கியம்' என்று சொல்லுங்கள். புத்தகங்கள் வாசிக்கவும் பழகிக்கொள்ளுங்கள். அது உங்கள் மனதிலுள்ள எண்ணங்களை வெளிப்படுத்தும் வடிகாலாகமாறும்’’ என்கிறார்.

Related Tags :
Next Story