முதுகலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டை களைய கோரி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக கூட்டத்தில் தீர்மானம்


முதுகலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டை களைய கோரி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக கூட்டத்தில் தீர்மானம்
x
தினத்தந்தி 26 March 2018 3:30 AM IST (Updated: 26 March 2018 12:40 AM IST)
t-max-icont-min-icon

முதுகலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டை களைய வலியுறுத்தி விடைத்தாள் திருத்தும் பணியை புறக்கணித்து போராட்டம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

விழுப்புரம், 

தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் சார்பில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் விழுப்புரத்தில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். செயலாளர் அருள் வரவேற்றார். மாநில சட்டத்துறை செயலாளர் அண்ணாமலை, துணைத்தலைவர் கலாநிதி, துணை பொதுச்செயலாளர் செந்தில்வேலன், மகளிர் அணி இணை செயலாளர் ஜனசக்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில தலைவர் மணிவாசகன் சிறப்புரையாற்றினார்.

கூட்டத்தில், 1.6.09 முதல் பணியேற்ற முதுகலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளை களைதல் வேண்டும், விடைத்தாள் திருத்தும் பணியை மே 20-ந் தேதி வரை நீடிப்பதால் ஈட்டிய விடுப்பை 30 நாட்களாக தருதல் வேண்டும், உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்வு மூலம் மாவட்ட கல்வி அலுவலர்களாக வரும்போது முகாம் அலுவலராக நியமிக்கக்கூடாது, மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விரைவில் விடைத்தாள் திருத்தும் பணியை புறக்கணித்து போராட்டம் நடத்தப்படும், இந்த போராட்டத்தில் 13 ஆயிரம் ஆசிரியர்கள் பங்கேற்பார்கள் என்று தீர்மானிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் மாவட்ட அமைப்பு செயலாளர் வேல்முருகன், தலைமையிட செயலாளர் குணசேகரன், மகளிர் அணி செயலாளர் யமுனாபாய், பிரசார செயலாளர் கிருஷ்ணகுமார், செய்தி தொடர்பாளர் ரமேஷ், தணிக்கையாளர் வெங்கடேசன் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் நந்தகோபாலகிருஷ்ணன் நன்றி கூறினார்.

Next Story